முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு கடலூரில் இந்தியா கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி. சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக மாநகர செயலாளர் செந்தில், மதிமுக மாவட்டச் செயலாளர் என். ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி சார்பில் ராமராஜ், சிபிஐ குளோப், திக சார்பில் எழிலேந்தி, தமிழ்நாடு மீனவர் பேரவையின் சுப்புராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.