சென்னை, ஆக. 28- செங்குன்றம் அருகே தொடர் மின்வெட்டை கண்டி த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், ஜோதி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின் தடை ஏற் பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்ட னர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் செவ் வாய்க்கிழமை நள்ளிரவு 200க்கும் மேற்பட்டோர் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பாடியநல்லூர் சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல் துறையினர் அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் வர வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரி கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் இது போல் மின்தடை ஏற்படாது எனக் கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடை பெற்ற சாலை மறியல் போராட்டத்தால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரண்டு பக்க மும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.