districts

சென்னை முக்கிய செய்திகள்

கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ. 1- தீபாவளி முடிந்து 4ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணி களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் தீபஒளி திருநாளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கொண்டா டினர். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத் துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சிலர் விமானங்களிலும் சென்றனர். தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக் கிழமை (நவ. 1) அரசு விடுமுறை அளிக்க ப்பட்டதால், 4 நாள் விடுமுறைக்குப் பின்னர் பெரும்பாலான மக்கள் (திங்கட் கிழமை) அதிகாலை சென்னைக்கு வர திட்டமிட்டு தங்கள் பகுதிகளிலிருந்து ரயில்களிலும், சிறப்பு பேருந்துகளிலும் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்னை மாநகரின் புறநகர்ப் பகுதி யான கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய  பேருந்து நிலையம் வரை மட்டுமே வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதி களுக்கு மக்கள் செல்ல வசதியாக திங்கட்கிழமை (நவ. 4) அதிகாலை முதல் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரு கிலுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத் திலிருந்து திங்கட்கிழமை (நவ. 4) அதி காலை 4 மணிக்கு முதல் ரயில் புறப்படு கிறது. அதனைத் தொடர்ந்து, 4.30, 5.00, 5.45, 6.20 மணிக்கு அடுத்தடுத்து ரயில்கள் புறப்படும் என்று கூறப்பட் டுள்ளது.

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு

சென்னை, நவ. 1- சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.   தீபாவளி பண்டிகையன்று பாது காப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரை களை சென்னை காவல் துறை அறிவுறுத் தியிருந்தது. மேலும் காலை 6 முதல் 7  மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை  என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை  எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித் தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்ப வர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்திருந்தது மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழனன்று அனுமதிக் கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடி த்ததாக இதுவரை 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

235 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

சென்னை,நவ.1 சென்னையில் 235 டன் பட்டாசு குப்பைகளை மாநகராட்சி துய்மை பணி யாளர்கள் அகற்றினர். சென்னை நகர மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினாலும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. காலையிலும், மாலையிலும் 2 மணி நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனாலும் அதனை யாரும் பின்பற்றவில்லை. வியாழக்கிழமை இரவு 7 மணியில் இருந்து பட்டாசு சத்தம் அதிரச் செய்தது. ஒவ்வொரு வரும் குடும்பம் குடும்பமாக வீதிகளுக்கு வந்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் புத்தாடை அணிந்து வித விதமான பட்டாசுகளை கொளுத்தி பர வசம் அடைந்தனர். வானில் வெடித்து சிதறி வண்ணமயமாக பூக்களாக சிதறும் பட்டாசுகள் இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் பயன்படுத்தினார் கள். பகலை விட இரவில் தான் பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள் வீதிகளில் மலைபோல் தேங்கின. ஒவ்வொரு வீடுகளின் முன்பு வெடித்த பட்டாசுகளை பெருக்கி குவித்து வைத்தி ருந்தனர். 34ஆயிரம் தெருக்கள் சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதி யிலும் உள்ள தெருக்களில் மக்கள் வெடித்த பட்டாசு குப்பைகளை அகற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலையிலேயே ஈடுபட்டனர். 5 ஆயிரம் பேர் குப்பை அள்ளும் பணி யில் ஈடுபட்டு வண்டியில் ஏற்றினர். தாங்கள் வழக்கமாக கொண்டு வரும் பேட்டரி வாகனம் உடனே நிரம்பி விட்ட தால் அருகில் உள்ள மையங்களில் கொட்டி விட்டு மீண்டும் வந்து அள்ளி னார்கள். ஒவ்வொரு தெருக்களில் பட்டாசு குப்பைகள் மலை போல் தேங்கி யதை ஊழியர்கள் அள்ள முடியாமல் திணறினார்கள். சென்னையில் வழக்க மாக 5500 மெட்ரிக் டன் குப்பைகள் வீடு களில் இருந்து சேகரிக்கப்படும். பட்டாசு வெடித்ததின் மூலம் கூடுதலாக  குப்பைகள் தேங்கியது. மொத்தம் 235 டன்னுக்கு மேலாக குப்பைகள் குவிந்த தாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மண்ட பத்திலும் எவ்வளவு குப்பைகள் சேகரிக் கப்பட்டன என்ற விவரம் முழுமையாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. குப்பைகள் அள்ளும் பணி பகல் 2  மணி வரை நடைபெற்றதால் முழு விவ ரம் தெரியவில்லை. பட்டாசு குப்பைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொடுங்கை யூர், பெருங்குடி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தங்கம் விலை  சற்று குறைவு

சென்னை,நவ.1- நவம்பவர் மாத தொடக்க நாளான வெள்ளிக்கிழமை (நவ.1)  தங்கம் விலை சவர னுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 23-ந் தேதி உச்சத்தை தொட்ட  நிலையில், அதன் பின்னர் விலை குறைந்தது. அதன் பின்னர் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் வெள்ளிக் கிழமை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி  ரூ.106-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறா யிரம் ரூபாய்க்கு விற்பனை யாகிறது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச  ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்குக பிஎஸ்என்எல் இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, அக். 30- ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என சிபிஎம் பிஎஸ்என்எல் அரங்க இடைக்கமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் பிஎஸ்என்எல் அரங்க இடைக்கமிட்டி 6ஆவது மாநாடு ஓட்டேரியில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் என்.கீதா, சாமியப்பன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மூத்த தோழர் கே.ஆறுமுகம் கட்சிக் கொடியை ஏற்றினார். இடைக்கமிட்டி உறுப்பினர் அண்ணாமலை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவண தமிழன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இடைக்கமிட்டி கன்வீனர் டி.காசி வேலை அறிக்கையையும், புனித உதயகுமார் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 50 லட்சம் நிலம் அபகரிப்பு: ஒருவர் கைது

அம்பத்தூர், நவ. 1- பொன்னேரி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.50 லட்சம் நிலத்தை அபகரித்த வழக்கில் பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி மரிய வேளாங் கண்ணி (56). இவருக்கு உடன் பிறந்தவர்கள் செபஸ்தியம்மாள், மரிய தங்கம், ஆல்பர்ட் ஆரோக்கியசாமி ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்க ளது பெற்றோர் பெயரில் பொன்னேரி வட்டம் ஆட்டந்தாங்கல் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,270 சதுரடி நிலம் உள்ளது.  இவர்களது பெற்றோர் காலமானதையடுத்து, இந்த நிலத்தின் மீது 4 பேருக்கும் பங்கு உள்ளது. இதற்கிடையில் மரிய வேளாங்கண்ணியின் அக்கா மரியதங்கம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதையடுத்து, மணல்குண்டு கிராமத்தில் இருந்த விவசாய நிலத்தை அடமானம் வைத்து, மேற்கண்ட நிலத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கணவர் மற்றும் தம்பி ஆல்பர்ட்டு டன் வசித்து வந்தனர். இந்நிலையில் மரியதங்கம், அவரது கணவர் அடைக்கல ராஜ் ஆகியோர் மேற்கண்ட நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, மரியதங்கம் மட்டுமே வாரிசு என பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலி வாரிசு சான்றிதழ் பெற்ற னர். அதன்பிறகு மரிய  தங்கம் கணவர் அடைக்கல ராஜிக்கு 2017ஆம் ஆண்டு தானச் செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து, மரிய வேளாங்கண்ணி உள்ளிட்  டோருக்கு சேர வேண்டிய சொத்தை போலி யாக ஆவணங்கள் தயாரித்து, மரியதங்கம் மற்றும் அடைக்கலராஜ் அபகரித்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து மரிய வேளாங்கண்ணி ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி, செங்குன்றம் அருகே பாடியநல்லூர் மொண்டி யம்மன் நகரைச் சேர்ந்த மரியதங்கம் (62) என்ப வரை கைது செய்து, பூந்த மல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். உடல்நலம் மற்றும் வயது முதிர்வு காரணமாக அடைக்கலராஜ் (66) என்பவரை நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

தீபாவளி கொண்டாட்டத்தால்  புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை  4 இடங்களில் மோசமான காற்றின் தரம்

சென்னை, நவ. 1- சென்னையில் தீபா வளி பண்டிகையை பலரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி யாக கொண்டாடிய நிலை யில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது. நாடு முழுவதும் காற்றில் கலந்துள்ள மாசு வின் அடிப்படையில் அதன் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. அந்த வகையில் காற்றின் தரக்குறியீடு 50க்கும் கீழ் இருந்தால் தரம் சிறப்பாக இருப்பதாகவும், 51 முதல் 100க்குள் இருந்தால் திருப்திகரமாக இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. காற்றின் தரம் 101க்கு மேல் இருந்தால் சுமார் என்றும், 201க்கு மேல் இருந்தால் மோசம் என்றும் கணக்கிடப்படுகிறது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடிய நிலையில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருங்   கடி, ஆலந்தூர், அரும்பாக் கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது. பெருங்குடியில் காற்றின் தரம் 262, ஆலந்தூரில் 258, அரும்   பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என பதிவானது. மேலும் கொடுங்  கையூர் 165, மணலி 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது. சென்னையில் எந்தப் பகுதி யிலும் காற்று தரமானதாக இல்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கைப்பேசியால் இயங்கும்  தானியங்கி  பம்புசெட் கட்டுப்படுத்தும் சாதனங்கள்  ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 160 ஒதுக்கீடு

ராணிப்பேட்டை, நவ. 1 -  ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 2024-25-ஆம் ஆண்டிற்கு கைப்பேசியால் இயங்கும் 160 தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.   பொதுப்பிரிவினருக்கு 150 ம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரி விற்கு 10 ம் பெறப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவினருக்கு மொத்த விலை யில் 40 சதவிகிதம் அல்லது ரூ. 5 ஆயிரம் மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடி யினர். சிறு,குறு மற்றும் பெண் விவசாயி களுக்கு 50 சதவிகிதம் அல்லது ரூ.7 ஆயிரம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.  கூடுதல் விபரங்களுக்கு உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, வாலாஜா அல்லது ஒன்றியங்களில் உள்ள உதவி பொறியாளர்/இளநிலைப் பொறியாளரை (வே.பொ) நேரில் அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.  இந்த சாதனங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மின்சார பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து அல்லது உங்கள் வீட்டில் இருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்க முடியும். கிணற்றில் நீர் இல்லாத போது தானாகவே நீர் இறைப்பது நிறுத்திவிடும்.  விவசாயிகள் தங்கள் மொபைல் போனில் வோல்டேஜ், கரண்ட் மோட்டார் ஓடுதல் நேரம். மோட்டார் நிலை ஆகிய வற்றை பார்க்க இயலும் மோட்டார் பம்பு செட் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இயக்க வேண்டும் என கைப்பேசியில் டைம் வைத்து விடலாம். எந்த இடத்தில் எந்த நேரத்தில் நீங்கள் இருந்தாலும், மொபைல் போன் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை இயக்க முடியும். இதன் மூலம் நேரம், மின்சாரம் மற்றும் நீரை சேமிக்க இயலும். தீ மற்றும் திருட்டுக்கான அழைப்பு எச்சரிக்கை மூலம் கைப்பேசிக்கு அனுப்பப்படும்.  மழை தொடங்கும் போது மோட்டார்கள் தானாகவே நிறுத்தப்படும். மோட்டார் காயில் 100 சதவிகித பாதுகாப்பானது என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு தாமதிக்காமல் ஊதியம் வழங்கவேண்டும் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.1- அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல்  ஊதியம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனை தொடங்கி, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் வலு வான கட்டமைப்பு வசதிகளை கொண்டி ருந்தன. தற்போது படிப்படியாக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு சீரழிவை சந்திக்கிறது.தேவையான மருந்து கள், தொழில்நுட்பக் கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லு நர்கள், வார்டு உதவியாளர்கள் உட்பட போதிய நிதி உதவியின்றி பற்றாக்குறை நீடிக்கிறது.மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைகளும், நடப்பு சம்பவங்களும் அரசின் வசம் இருந்து மருத்துவமனைகள் கைவிடப்படும் நிலையை நோக்கி நகர்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் ஏழை நோயாளிகளிடம் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார். புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 108 ஒப்பந்த மருத்துவர்கள் ஐந்தாண்டுகள் முதல் 17 ஆண்டுகள்  வரையில் பணியாற்றி வருகின்றனர். இம் மருத்துவர்களே  அரசு மருத்துவமனையை இயக்குகிறார்கள். இவர்களுக்கு வழங்க வேண்டிய மாதாந்திர ஊதியம் காலத்துடன் வழங்கப்படு வதில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட காலத்துடன் ஊதியம் வழங்காமல் அலட்சியம் காட்டியது கண்டனத்துக்குரியதாகும். ஆகவே மாநில முதல்வர்,உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்த மருத்து வர்களுக்கு மாத ஊதியம் காலத்தோடு வழங்க வேண்டுகிறோம். மேலும் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வழங்கியதை போல ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஒரு முறை சிறப்பு அனுமதி பெற்று பணி நிரந்தரம் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு வெடித்ததில்  7 வீடுகள் தீக்கிரை : 73 பேர் காயம் 

கடலூர், நவ.1-  கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததில், ஏழு குடிசை வீடுகள் தீக்கிரையானது, 73 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்ற னர்.  மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 7 இடங்களில் கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  மேலும் மாவட்டத்தில் கடலூர், விருத்தாச்சலம், நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி, வேப்பூர் உள்ளிட்ட   பகுதிகளில்  வியாழக்கிழமை அதிகாலை முதல் இரவு வரை தீபாவளிக்கு பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்து வந்தனர். இதில் 73 பேர் தீக்காயம் அடைந்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

ரயிலில் தவறி விழுந்து உதவி ஆய்வாளர் மரணம்

வேலூர்,நவ,1 சென்னை அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் சென்னையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வேலூர் காட்பாடி வந்திருந்த இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை செல்வதற்காக வந்தார். 2-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. பிளாட்பாரம் வழியாக ரயிலில் ஏறாமல் தண்டவாளப் பகுதியில் இருந்து செந்தில் குமார் ஏறினார். அப்போது ரயில் திடீரென புறப்பட்டது. இதில் நிலை தடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்தார். அவர் ரயில் சக்கரத்தில் சிக்கிய தால் அவருடைய கால்கள் துண்டானது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காட்பாடி ரயில்வே போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி விடுதலை நாள் சிபிஎம் கொண்டாட்டம்

புதுச்சேரி, நவ.1- பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் 1954 நவம்பர் 1ல் விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ-1) தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பஞ்சாலை தொழிலாளரும்,கட்சியின் மூத்த தோழர் லட்சுமணன் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், பிரபுராஜ், கலியமூர்த்தி இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,ஜோதிபாசு உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதேப்போல் பாகூர்,வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, உழவர்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி விடுதலை நாள்விழா கொண்டாடப்பட்டது.