districts

img

3 நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை, செப்.1- திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட சாரோன் செங்கம் சாலை 25வது வார்டுக்குட்பட்ட பெரும்பாக்கம் சாலை மற்றும் திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு ஊராட்சி ஆகிய 3 இடங்களில் ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடைகளை அமைச்சர்  எ.வ.வேலு திறந்து வைத்தார். 298 பேருக்கு மின்னணு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.  மேலும் பாவுப்பட்டு மற்றும் நடுப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ரூ.58.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர்  நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் சு.ராஜாங்கம், 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.ஸ்ரீதேவி பழனி பாவுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் வரவேற்றார்.   இந்த நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.