districts

img

ஒன்றுபட்ட போராட்டம் காலத்தின் கட்டாயம்

ஒன்றுபட்ட போராட்டம் என்பது ஒரு  சமூகம் அல்லது தேசம் ஒரு  பொதுவான நோக்கத்தை அடைய போராடுவது இன்றைய காலத்தின் கட்டா யம் என்ற உணர்வோடு 3.2.2013அன்று தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருச்சியில் உரு வானது. போராட்டம் ஒன்றே ஓய்வூ தியர்கள் நலனை காக்கும், குறைகளை தீர்க்கும் என்ற உணர்வோடு இந்த சங்கம் உருவாக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் 80 ஆயிரம்  உறுப்பினர்களை கொண்டு மாபெரும்  அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஒன்றுபட்ட போராட்டங் கள் பல  வெற்றிகளையும், முன்னேற்றங் களையும் கொடுத்துள்ளது. அமைப்பு ரீதியாக நான்கு மாநாடுகள், ஏழு மாநில  பேரவைகள் நடந்துள்ளன. எட்டாவது மாநில பேரவை 16.10.2024 அன்று திருவாரூரில் நடக்க இருக்கிறது. இந்த மாநில பேரவையில் உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசி யல், ஓய்வூதியர்கள் எதிர் காலம் சவால்கள் போன்ற வற்றை விவாதித்து பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம். குறிப்பாக, தமிழகத் தில் பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வென் றெடுக்க போராட்டங் களை பேரவை அறிவிக்க உள்ளது.அந்த திசை வழியை நோக்கியே தமிழகத்  தில் கடந்த இரு மாதங்களாக வட்ட மற்றும் மாவட்ட பேரவைகளை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று சென்னையில் மாவட்ட பேரவை நடக்கிறது. சென்னை மாவட்ட பேரவை, மாநில பேரவைக்கு உந்து சக்தியாக அமையும்.