சென்னை, ஜன. 13- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்ட மைப்பின் மகளிர் அமைப்பின் சென்னை தலைவர் டாக்டர் திவ்யா அபிஷேக் தலைமையில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்ட விழிப்புணர்வு கருத்த ரங்கு சென்னையில் நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மெட்ராஸ் மேலாண்மை சங்கம், விரிவான தகராறு தீர்வுக்கான அறக்கட்டளை மற்றும் ஜாக்ரிதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்குகளை மோதல் இல்லாத வகை யில் மற்றும் ஆக்கபூர்வ மான முறையில் தீர்த்து வைப்பது குறித்து விவா திக்கப்பட்டது. மேலும் தனிப்பட்ட உறவுகள் மற்றும் பரம்பரை சொத்துக்களில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் குடும்ப வணிக தகராறுகளைத் தீர்ப்பது குறித்தும் குழுக்கள் விவா தித்தன, உறவுகளைப் பாது காப்பதில் மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தின. இந்த கருத்தரங்கிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி மற்றும் சென்னை, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி கே.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி னர். எம்எம்ஏ நிர்வாக இயக்குனர் கேப்டன் விஜய்குமார், எப்சிடிஆர் இணை நிறுவனர், மூத்த வழக்கறிஞர் புஷ்யா சீதா ராமன் மற்றும் ஜாகிருதி அறக்கட்டளை நிறுவனர் அறங்காவலர் கே.பி. சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். ஜாக்ரிதி அறக்கட்டளை யின் இணை நிறுவனர் அஜய் சிங் தலைமையில் நடைபெற்ற அமர்வில், குடும்ப மோதல்களைத் தூண்டும் சுயநலம் உள்ளிட்ட அடிப்படை உள வியல் காரணிகள் குறித்து ஆராயப்பட்டது.