districts

சென்னை முக்கிய செய்திகள்

விபத்தில்லா தின விழிப்புணர்வு
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை, ஆக,6- சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி யாக சென்னை போக்குவரத்து போலீ ஸார், ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை சென்னையில் தொடங்கி உள்ள னர். தொடர்ந்து 20 நாட்கள் இந்த விழிப்பு ணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்ய, சென்னை போக்குவரத்து போலீஸார், யூ திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்ட லங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ‘ஜீரோ இஸ் குட்’ (ZERO IS GOOD) என்ற பெயரில் சென்னை முழுவதும் நூதன விளம்பரம் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை மேற்கொண்டனர். அதாவது விதிமீறல், அபராதம், விபத்து, விபத்து உயிரிழப்பு என அனைத்தும் ஜீரோ வானால் விபத்துகள் இன்றி விபத்து மரணங்கள் ஜீரோவாகி விடும் என்பதை மையமாக வைத்து இதுபோன்ற விழிப்பு ணர்வை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சி யாக இந்தியாவிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளைக் குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘விபத்தில்லா தினம்’ (ZERO ACCIDENT DAY) என்ற பெயரில் மெகா விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை செவ்வாய்கிழமை முதல் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் இரண்டு மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை 

சென்னை, ஆக.6- சென்னையில் செவ்வாயன்று இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், சென்னை விமான நிலையம், நங்கநல்லூர், முடிச்சூர், வண்டலூர், பாரிமுனை, திருவொற்றியூர்  உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர்  சில மணிநேரம்  தேங்கி நின்றது. இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல்மருவத்தூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம்,  கருங்குழி,  செய்யூர் இடைகலை நாடு, கோவளம், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன்   கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கூடுதல் பணிகளை மேற்கொள்ளும்  இளைஞர்களுக்கான போன்

சென்னை, ஆக 6- ஐக்யூஓஓ நிறுவனம் ‘இசட்9எஸ் புரோ 5ஜி’ மற்றும் ‘இசட்9எஸ் 5ஜி’ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களை இம்மாதம் 21-ந்தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் இசட் மாடல் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் பரபரப்பாக செயல்படும் இளம் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு ஏற்ற வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்பு ஆகியவை இளைஞர்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுனர்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்வியாளர்கள், தடையற்ற பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு இந்த போன் பயன்படும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

அம்பத்தூர், ஆக. 6- சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. அம்பத்தூர் பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமுருகன் (25). இவர் ஆட்டோ ஓட்டுநர். கடந்த 2019ஆம் ஆண்டு அழகுமுருகன் தனது ஆட்டோவில் நண்பர் ஒருவருடன் சென்று  கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் மோகன்(25), டேனியல் (23) மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அழகு முருகனை வெட்டிக் கொலை செய்தனர்.  புகாரின் பேரில் ஜெ.ஜெ நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மோகன் (25), டேனியல்(23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3இல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், செவ்வாயன்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார்.  அதில் அழகு முருகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்ட்ட மோகன், டேனியல் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மோகனுக்கு ரூ.16 ஆயிரம், டேனியலுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் அதனை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார்.  இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்  3 பேரில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 பேர் மீதும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்த பணியாளர்களை பணியிட மாற்றம்  செய்வதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்க!
புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், ஆக 6- ஒப்பந்த பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்வதில் நடைபெற்றும் குளறுபடிகளில், துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவாழ்வு திட்ட பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை யின் கீழ் இயங்கும் ஊரக வளர்ச்சித் துறையில்  செயல்படும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் பெரும்பான்மை யானோர் பெண் பணியாளர்கள், அனை வரும் பட்டதாரிகள்,  இவர்கள் நீண்ட கால மாக தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மகளிர் சுயஉதவி குழுவின்  மூலமாக தமிழக முழுவதும் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பழங்குடி மக்கள்,  மூன்றாம் பாலினத்தவர் ஆகி யோரின் முன்னேற்றத்திற்காக அரசு கொண்டுவரும் புதிய திட்டங்களை  மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.   கடந்த 1.8. 2024 அன்று திடீர் என்று உதவி திட்ட  அலுவலர்களை தமிழ்நாடு முழுவதும் 50 நபர்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். குறிப்பாக இதில் ஒரு வருடம் பணியாற்றிய 10 பணியாளர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சம்பந்தமே இல்லாமல் 50 உதவி திட்ட அலுவலர்களை பல மாவட்டங்கள் கடந்து பணியிடம் மாற்றம் செய்திருப்பது சட்ட விரோதமானது. ஏற்கெனவே வாழ்ந்து காட்டும் திட்டத்தில்  ஒன்றிய அளவில் பணியாற்றும் பணியாளர்களை கூட, மாவட்டம் விட்டு,  மாவட்டம் பணியிட மாற்றம் செய்வதினால் பல பணியாளர்கள் பணியில் சேர முடியாமல்வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு,  நிரந்தர பணி யாளர்கள் பணியிட மாற்றம் செய்யும் போது,  கடைபிடிக்கும் குறைந்த பட்ச நடைமுறையை கூட ஒப்பந்த பணி யாளர்களின்  பணியிட மாற்றத்தில் கடை பிடிக்கவில்லை. இதனுடைய மேலாண்மை இயக்குநர்  என்ன நோக்கத்தோடு பணியிட மாற்றம் செய்கிறார் என்பது புரியவில்லை. குறிப்பாக பெண் பணியாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று மாவட்ட அளவில் பணி யாற்றக்கூடிய  ஒன்றிய திட்ட மேலாளர் களையும்,  மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றும் செய்யப்போவதாக ஒரு தகவல் வருகிறது இதுவும் ஆபத்தானது. குறைந்தபட்ச ஊதியத்தில் பணி யாற்றும் ஒப்பந்த பணியாளர்களை அதே மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்வது தான் நியாயமான ஒன்றாக இருக்க முடியும். எனவே அமைச்சர் பரிசீலனை செய்திட வேண்டும் அதிகாரிகள் தனக்கு பிடிக்காதவர்களை பணியிட மாற்றம் செய்யும் நிலையை மாற்றி நியாயமான ஒரு பணியிடம் மாற்றத்தை  நடத்திட தலையிட வேண்டும். புதுவாழ்வு திட்டத்தில் பணியாற்றி இதுவரை 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எந்த பணியும் வழங்காமல் காத்திருக்கிறார்கள் அவர்களையும் காலியாக உள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட  பணியாளர் சங்கத்தின் மாநில தலை வர் ஆர்.தமிழ்அரசு  கேட்டுக் கொண்டுள்ளார்.

கனரக வாகனம் மோதி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்,ஆக.6-  நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறு வனத்தில் திங்களன்று இரவு சுரங்கம் 1ஏ சுரங்கத்தில்  பணிபுரியும் வடலூர் பகுதி யைச் சேர்ந்த குழந்தை வேலு என்ற ஒப்பந்த தொழி லாளி சுரங்கத்தில் இயங்கும் கனரக வாகனம் ஏறி இறங் கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இரவு நேரம் என்பதால்  தொழிலாளி இறந்தது தெரியவில்லை. இதை யடுத்து செவ்வாயன்று காலை பணிக்கு வந்த சக  தொழிலாளர்கள் குழந்தை வேலு உடல் நசுங்கி இறந் ததை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர். நிர்வாகத்திடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது சடலத்தை என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே கலந்த சில நாட்களுக்கு முன் கன்வே யர் பெல்ட்டில் சிக்கி தொழி லாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது கன ராக வாகனம் ஏறி தொழி லாளி உயிரிழந்தார்.

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விழுப்புரம்,ஆக.6- பட்டா மாற்றம் செய்ய விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,மயிலம் ஒன்றியம், சிங்கனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன்  (46), இவர் தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய,  விஏஓ, தனவேலை அணுகினார். அதற்கு அவர் ரூ.5ஆயிரம்  லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விவசாயி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார்  கொடுத்தரசாயனம் தடவிய ரூ.5ஆயிரம் பணத்தை, விவசாயி திங்கள்கிழமை கிராம உதவியாளர் ஏழுமலை, மூலம் விஏஓ தனவேலுவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக இருவரையும், பிடித்து கைது செய்தனர்.

தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஆக. 7- சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு 9ஆவது முறையாக பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலக இமெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலானது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டு இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.