புதுச்சேரி, ஆக.7- புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ்நாதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். பதவி ஏற்பு விழா புதுச்சேரி ராஜ்நிவாஸில் புதன்கிழமை (ஆக.7) நடைபெற்ற விழாவில், புதிய துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ் நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம், செய்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், எதிர்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலை வர்கள், தலைமை செயலாளர் சரத் சவுகான், அரசு அதிகாரிகள்,காவல்துறை அதி காரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.