ராணிப்பேட்டை, ஜூலை 5- ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தில் உள்ள ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நான்கு மாதங் களுக்கு முன்பு சாலை விபத் தில் சிக்கினார். அப்போது, வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தினகிரி அருகே உள்ள சிஎம்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். சாலை விபத்தில் சிக்கிய நபர்களுக்கு விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரம் வரை எவ்வித முன் கட்டண மும் இன்றி ரூ.2 லட்சம் வரையில் சிகிச்சை பெற லாம் என தமிழ்நாடு முதல மைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, மணிகண்டனுக்கு சிகிச்சைக்காக ரூ. 1.25 லட்சம் மருத்துவ செலவுத் தொகையை மருத்து வமனை ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மணிகண்டனை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் பயனடைந்தது குறித்து நலம் விசாரித்தார். அப்போது தனது நலம் முன்னேற்றம் அடைந்திருப்பதை தெரி வித்துள்ளார். மேலும், சிகிச்சைக்கு அனைத்து வகையிலும் உதவியதற் காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.