வேலூர், ஆக. 16 - வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முதல் சாலைப்பேட்டை வரை மாநில நெடுஞ்சாலையில் சாலை நடுவே மின் விளக்குகள் மற்றும் இரண்டு உயர் மின் கோபுரம் விளக்குகள் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நகர மன்றத் தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணை யர் வரவேற்றார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்த னர். வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் பங்கேற்று திறந்து வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், விஜயகுமார், எம்.எஸ்.டேவிட், சிபிஎம் பேரணாம்பட்டு பகுதி செயலாளர் நா.சே.தலித் பாஸ்கர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜானகி பீட்டர், சின்ன லாசர், என்.ஆர்.டி. வெங்கடேசன், வழக்கறிஞர் அப்துல் ஹமீத் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.