districts

img

ஆட்சியர் பெயர் பலகை உடைப்பு

 கடலூர்,ஜூன் 9 - கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை உள்ளது. இந்த  அறைகளுக்கு வெளிப்புறத்தில் பெயர் பலகை இருந்து வந்தது.  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பெயர் பலகைகள் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தன. மேலும் ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் அரசு ஜீப்  நிறுத்தி. இந்த ஜீப் கண்ணாடி உடைந்த நிலையில் இருந்தன,  இதனை பார்த்த அரசு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.  மேலும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்து பெயர் பலகையை உடைத்து மர்ம நபர்கள்  குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில்  கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.