திருவண்ணாமலை, ஜூலை 9- திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆண்டு காலம் வேலை செய்த, பழங்குடியின பெண் ஆஷா தொழி லாளியை தேர்தல் நடத்தை விதிகளை மீறி, நிரந்தரமாக பணியில் இருந்து எடுத்து விட்டு புதிதாக ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட பழங்குடியின ஆஷா ஊழியர், கடந்த 2010 ஆம் ஆண்டி லிருந்து பணியாற்றி வருகிறார். கொரோனா கால முன்கள பணியாளராக செயல்பட்ட அவர் உலக சுகாதார நிறுத்தால் பாராட்டு பெற்றவர். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கைவிட்டு, சமூக நீதி காக்கும் விதமாக மீண்டும் அவருக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆஷா ஊழியர் சங்கத்தின் சார்பாக ஜமுனாமத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பார்வதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ப. கணபதி மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் கமலக்கண்ணன், சங்கர், முத்து ராஜ், அண்ணாமலை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், சாலையோர வியா பாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.