நாமக்கல், ஜன.18- பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த னர். நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் 1330 மீட்டர் உயரத் தில் கொல்லிமலை அமைந்துள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந் தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வருகை தருவது வழக்கம். அரசு மற்றும் தனியார் தங்கு விடுதிகள் ஏராளமாக உள்ளதால், தொலைதூரங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலையில் தங்கி செல்கின்றனர். மேலும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் சுற்றுலாப் பயணி கள் தவறாமல் குளித்துச் செல்வர். கடந்த ஒரு வார கால மாகவே கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு அலு வலகங்கள் பள்ளி கல்லூரிகள் வணிக நிறுவனங்கள் உள் ளிட்டவை விடுமுறை விடப்பட்டது. மேலும், ஏழு நாட்கள் தொடர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பொங் கல் பண்டிகை நாட்களிலே கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்ட நிலையில், சனியன்று வழக் கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வாராந்திர விடுமுறை முடிவடைவதால், ஏரா ளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொல்லி மலைக்கு வருகை தந்தனர்.