districts

img

ஊத்துக்குளி மக்களின் உற்ற துணை செங்கொடி இயக்கம்!

ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊத்துக்குளி, திருப்பூர் மாவட் டம் உருவாக்கப்பட்டபோது இணைக்கப் பட்டு பின்பு தனி தாலுகாவாக உயர்த்தப் பட்டது. ஊத்துக்குளி, குன்னத்தூர் இரு  பேரூராட்சிகள் உள்பட முற்றிலும் கிரா மப்புறங்களைக் கொண்ட ஊத்துக்குளி வெண்ணெய்க்கு பெயர் பெற்றது. இங்கு  உழைக்கும் மக்கள் வாழ்வோடு, பின்னிப்  பிணைந்து இருக்கிறது செங்கொடி இயக் கம். கோவை – சேலம் தேசிய நெடுஞ் சாலை பல்லகவுண்டன்பாளையம் - நடுப் பட்டி சந்திப்பில் ஏராளமான உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டதை தடுக்க பாலம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கமும், உண்ணாவிர தப் போராட்டமும் நடத்தியது. . போராட் டத்தின் விளைவாக புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நடுப் பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சி மக்கள் பயன்  பெறுவர்.

மருத்துவமனை போராட்டம்

இந்த வட்டார கிராமப்புற உழைக்கும் மக்களின் சுகாதாரம் காக்கும் ஆதாரமாக ஊத்துக்குளி அரசு மருத்துவமனை உள் ளது. இங்கு புதிய கட்டிடம் திறக்கவும், புற நோயாளிகள் பிரிவை முறையாக செயல் படுத்தவும், அவசர சிகிச்சை அளிக்கவும் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத் துவத் துறை உயரதிகாரிகளுக்கு மனு  அளித்து தொடர் தலையீடு செய்யப்பட் டது.  இதைத்தொடர்ந்து, மருத்துவத் துறை இணை இயக்குநர் நேரில் வருகை தந்து கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்தார். இதன் விளைவாக தினந்தோறும் 400-க்கும் மேற்பட்ட புற  நோயாளிகளுக்கும், ஏராளமான உள்  நோயாளிகளுக்கும் புதிய கட்டிடம் சிறப் பாக பயன்பட்டு வருகிறது.அனைத்து மருத்துவ பிரிவுகளுக்கும் மருத்துவர், கூடுதல் பணியாளர் நியமனம், திருப்பூர் செல்ல பரிந்துரைக்காமல் இங்கேயே மருத்துவம் செய்ய ஏற்பாடு உள்ளிட்ட கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வரு கிறது.  குன்னத்தூர் பொன்காளியம்மன் நக ருக்கு சாலை உள்பட அடிப்படை வசதிகள்  கோரி குன்னத்தூர் பேரூராட்சி அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத் தியதால் பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் மற்றும் காவல் துறையினர் பேச் சுவார்த்தை நடத்தினர். இவர்கள் உறுதிய ளித்தபடி புதிய தார் சாலை ஏற்படுத்தி, குடிநீர், விளக்கு வசதி செய்யப்பட் டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை உற்ற  துணையாக நேசிக்கின்றனர். குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் பிரதான சாலையை ஆக்கிரமித்து செல் வாக்கு மிக்க பிரமுகர் ஒருவர் தேநீர் கடை  அமைக்க முயற்சித்தபோது அனைத்து கட் சியை திரட்டி காத்திருப்பு போராட்டம் அறி வித்துத் தடுத்து நிறுத்தப்பட்டது.  செங்கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  நகைக் கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொடர்ந்து இயக்கம் நடத்தி நகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. செங்கப்பள்ளி மணியோசை நகரில் பிர தான குழாய் பழுது ஏற்பட்டு குடிநீர்  விநியோகம் பல நாட்கள் நிறுத்தப்பட்ட தால் அவதியுற்று மக்களை திரட்டி ஆர்ப் பாட்டம் நடத்தியதன் விளைவாக உடனடி யாக லாரி தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டது. 

கல்வி நலன்

பல்லகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டாய நன் கொடைக்கு எதிராக இயக்கம் நடத்தப்பட் டது. குன்னத்தூர் தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத் தின்படி சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த நிர்வாகம் நிர்பந்தம் செய்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி,  அதிகாரிகளை தலையிட வைத்து குழந் தைகளின் கல்வி நலன் பாதுகாக்கப்பட் டது. ஊத்துக்குளி ஆர்.எஸ். நியாயவிலை அங்காடிக்கு சொந்த கட்டிடம் அமைக்க கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்ததன் விளைவாக தற்போது புதிய கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்த பொது மயா னம் குப்பை கொட்டப்பட்டு சீர்கேடாக இருந்தது. இதை சீரமைக்க கோரி பல் வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது. பின்பு  தன்னார்வலர்கள் உதவியோடு குப்பை கள் அகற்றப்பட்டு நல்ல மண் கொட்டப் பட்டு சீரமைக்கப்பட்டு கழிவுகள் கொட்டப் படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. வடு கபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம்  கம்பி வேலி அமைக்கப்பட்டது. 

சொத்து வரி உயர்வுக்கு எதிராக

ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி களில் சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஊத்துக் குளி பேரூராட்சி மக்கள் நலக் கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த 2020 டிசம்பர்  28 அன்று பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிலமற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு தொடர் இயக்கங்கள் நடத்தப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயன் பெற் றுள்ளார்கள். ஊத்துக்குளி தாலுகா அலு வலகத்தில் நிலவும் லஞ்ச ஊழலுக்கு எதி ராக தனிநபர் தர்ணா போராட்டம் நடத்தி  வெற்றி அடைந்தது செங்கொடி இயக் கம். 

உயிர் காக்கும் சேவை

கொரானா முதல் மற்றும் இரண்டாவது அலையில் நிவாரணப் பணிகள் மேற் கொண்டனர். முதல் அலையில் குன்னத் தூரில் மாற்றுத் திறனாளிகள் 20 குடும் பத்திற்கு நிவாரண பொருட்கள் நண்பர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. ஊத்துக் குளியில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் அத்தியா வசிய பொருட்கள் 318 நலிந்த குடும்பங்க ளுக்கு நண்பர்கள் உதவியுடனும், கட்சி  நிதியிலிருந்தும் வழங்கப்பட்டன. உண வுப்பொருள் இல்லாத, சிரமப்பட்ட வெளி  மாநில தொழிலாளருக்கு வருவாய் துறை யில் பேசி அரிசி, கோதுமை, தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  இரண்டாவது அலையின்போது நோயாளிகள் படுக்கை வசதி இன்றி அலைந்தபோது தகவல் மையம் ஏற்ப டுத்தி உதவி செய்யப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் உதவியோடு நிழல் பந்தல் உள்ளிட்ட தேவையான உதவிகள் செய்யப்பட்டது. ஊத்துக்குளி அன்னவாசல் திட்டம் துவக் கப்பட்டு 15 நாட்கள் கபசுர குடிநீரும், நலிந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள், கோவிட் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கப் பட்டது. முதல் நாள் 86 பொட்டலத்தில் துவங்கி கடைசி நாள் 480 பொட்டலங்கள் வரை வழங்கப்பட்டது. இந்த பாராட்டத் தக்க சேவையில் ஏராளமான ஊழியர்கள், மாதர்கள் ஈடுபட்டனர். இதற்கு இப்பகுதி மக்கள் நிதி, பொருளாக ரூ.1 லட்சம் வரை  கொடுத்தனர். செங்கொடி இயக்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இது வெளிப் படுத்துகிறது. 

;