கோவை, ஆக.25- இந்திய மாணவர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட சிறப்புப் பேரவை, சங்கத்தின் மாவட் டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. வெண்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் கயல்விழி ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாவட்ட முன் னாள் செயலாளர் தினேஷ்ராஜா துவக்கவு ரையாற்றினார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சுதா, வங்கி ஊழியர் சம்மேளன மாவட் டச் செயலாளர் மகேஷ் ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். மாவட்டச் செயலாளர் அசாரு தீன் அறிக்கையை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஜுல்பி, செயலாளராக ஜெகதீஷ், மாவட்ட துணைத்தலைவர்களாக ரஞ்சித், மனிஷா, கோபி, துணைச்செயலாளர்களாக சந்தியா, சந்தோஷ் குமார், சுதின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது நிறைவுரையாற்றி னார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.