தருமபுரி, டிச,25- முறையாக பராமரிப்பற்ற நிலையில், சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தருமபுரி நக ரின் சாலைகளில் கழிவுநீர் வழிந் தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத் தியுள்ளது. பாதாள சாக்கடை திட் டத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது. தருமபுரி நகராட்சியில் மொத் தம் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி யில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் கடை மற்றும் வணிக நிறு வனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால் வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு தருமபுரி நகராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. முதல்கட்டமாக 19 வார்டு களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீரை ஒருங் கிணைத்து மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அந்த கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்பட்டுவந்தது. ஆனால், தற்போது சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீரை சுத்திக ரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரி யில் விடுகின்றனர். தருமபுரி நக ரில் சிறு மழை பெய்தாலே பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. கடந்த 2010 ம் ஆண்டு மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகள் மட்டுமே பாதாள சாக்கடைத் திட் டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் நிறைவேற்றப் பட்ட வார்டு களிலும் கழிவு நீர் முழுமையாக வெளியேறுவ தில்லை. தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக பராம ரிக்கப்படாததால் பாதாள சாக் கடையில் அடைப்பு ஏற்பட்டு நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றபட்ட பகுதிக ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சோ.அருச்சுனன், நகரச் செய லாளர் ஆர். ஜோதிபாசு, மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ். ராமச்சந்திரன், ஏ.ஜெயா, மற்றும் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குரளரசன் மற்றும் ரங்கநாயகி ஆகி யோர் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்குவது குறித்தும் இதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அதிகாரிக ளின் கவனத்திற்கு கொண்டு சென்ற னர். தற்போது தருமபுரி நகராட்சி யில் உள்ள 14 வார்டுகளில் 2ஆம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தொலை நோக்கு பார்வை யுடன் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே பாதாள சக் கடைத் திட்டம் செயல்படுத்திய வார்டுகளிலும் கழிவு நீர் தேங்காமல் இருக்கவும் பாதாள சாக்கடைத் திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்ப டாமல் தடுக்க வேண்டும்.என நகராட்சியையும், மாவட்ட நிர்வாகத் தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.