சத்தியமங்கலம், அக்.19- கேர்மாளம் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கேர் மாளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜோகனுார், சிக்குன்சேபாளையம், தழுதி, கானகரை, உருளி குட்டை, ஜே.ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் உருளை கிழங்கு பயிரிட்டிருந்தனர். தற்போது உருளைக்கி ழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகி றது. மூட்டை ரூ.1,500 முதல் ரூ. 2,000 வரை விலை போகிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.