districts

img

சிபிஎம் கெங்கவல்லி தாலுகா செயலாளராக பி.தமிழ்மணி தேர்வு

சேலம், அக்.24- மார்க்சிஸ்ட் கட்சியின் கெங்கவல்லி தாலுகா செய லாளராக பி.தமிழ்மணி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெங்கவல்லி தாலுகா 8 ஆவது மாநாடு, தம்மம்பட்டி அண்ணா சமுதாயக்கூடத்தில், தோழர் என்.சங்கரய்யா, தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் வியாழனன்று நடைபெற்றது. மூத்த தோழர் ஜோதிகுமார் செங்கொடியை ஏற்றி வைத்தார். பி.மணி வர வேற்றார். வி.வெங்கடாஜலம் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எஸ்.கே.சேகர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். அறிக்கையை தாலுகா  செயலாளர் பி.தமிழ்மணி முன் வைத்தார். இம்மாநாட்டில், தம்மம்பட்டி பகுதியில் அரசு  கலைக்கல்லூரி அமைக்க  வேண்டும். குடிமனை கேட்டு  விண்ணப்பித்த அனைவருக் கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சி யின் கெங்கவல்லி தாலுகா செயலாள ராக பி.தமிழ்மணி உள்ளிட்ட 7 தாலு காக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.முருகேசன் நிறைவுரையாற்றினார். எஸ்.ஆர்.பெருமாள் நன்றி கூறினார்.