சேலம், நவ.9- சேலம் ஆவின் பால்பண்ணையில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், ரா.ராஜேந்திரன் ஆகியோர் வெள் ளியன்று ஆய்வு செய்தனர். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற் பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல் பாடுகள் குறித்து, சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன் ஆகியோர் வெள்ளி யன்று ஆய்வு செய்தனர். இதன்பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு பால் உற் பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல் பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தில் புதியதாக ரூ. 140 கோடி மதிப்பீட்டில் தினசரி 30 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும் வகையிலான தொழிற்சாலை மற்றும் முழு நவீன மயமாக்கப்பட்ட தினசரி 7 லட்சம் லிட்டர் பால் பொட்டலங்கள் தயா ரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக் கப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய் யப்பட்டது. பொதுமக்களுக்காக செயல் படும் ஆவின் மூலம் பால் ஒரு லிட்டர் ரூ.40க்கு பொதுமக்களுக்கு வழங்கப் படுகிறது. அனைத்து ஆவின் பால் பண்ணைகளும் தூய்மையாக பரா மரிக்க வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது, என்றார். முன்னதாக, ரூ.21 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு கறவை மாடு கடனு தவிகளும், ரூ.6.30 லட்சம் மதிப்பில் கறவை மாடுகள் பராமரிப்பு கடனுதவி களும், ரூ.27.13 லட்சம் மதிப்பில் செயற்கைமுறை கருவூட்டல் உபகர ணங்களும், ரூ.37.60 லட்சம் மதிப்பில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் என மொத்தம் ரூ.92.03 லட்சம் மதிப்பி லான அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. இந்த ஆய்வின்போது, ஆவின் மேலாண்மை இயக்குநர் சு. வினீத், சேலம் ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந் திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப் பினர் ரா.அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கூடு தல் ஆட்சியர் லலித் ஆதித்ய நீலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.