ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899 ஜூன் 15 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்.15 ஆம் தேதியன்று உதகை ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீடிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்.15 ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், செவ்வாயன்று உதகை மலை ரயிலுக்கு, 116 ஆவது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி ரயில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடினர்.