திருப்பூர், அக்.2 - திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் கடித்துக் குதறி விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள், கன்றுக் குட்டி உள்ளிட்ட கால்நடைகள் உயி ரிழந்து வருவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்டத்தின் பல் வேறு கிராம ஊராட்சிகளில் நடை பெற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. திருப்பூர் மாவட்டத்தில் ஊத் துக்குளி, காங்கேயம், வெள்ளக் கோவில், மூலனூர், தாராபுரம் உள் பட பல்வேறு ஊராட்சி ஒன்றியப் பகு திகளில் வெறி நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு, விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு மாடு உள் ளிட்ட கால்நடைகளை கடித்து குதறி கொன்று வருகின்றன. இதனால் சமீப சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை கள் உயிரிழந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சக்கணக் கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. எனவே வளர்ப்பு கால்நடை களை கொன்று வரும் வெறி நாய் களை கட்டுப்படுத்தவும், கால்நடை களை இழந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு இழப் பீடு வழங்கவும் வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகி றது. அதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி நாளில் திருப்பூர் மாவட் டத்தில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களில் இது குறித்து விவசாயிகள் தீர்மானங்களை முன் மொழிந்து, அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக காங்கேயம் ஒன்றி யம் சிவன்மலை ஊராட்சி, வீரணம் பாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஒன்றியம் கண்டியங்கோவில் ஊராட்சி, குண்டடம் ஒன்றியம் வட சின்னாரிபாளையம் ஊராட்சி, வெள்ளக்கோவில் ஒன்றியம் சேனா பதிபாளையம் ஊராட்சி, மூலனூர் ஒன்றியம் எம்.கருப்பன் வலசு ஊராட்சி, கிலாங்குண்டல் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தெருநாய்களை கட் டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இது தவிர பல்லடம் ஒன்றியம் கணபதி பாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் ஊராட்சி, ஆகிய கிராம சபை கூட் டங்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூர் முதல் கரூர் வரை செல்லும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய் களை விளைநிலங்களில் தோண்டி எடுத்து சாலை ஓரம் அமைக்கவும், பிஏபி பாசன திட்டத்தில் ஆனை மலை ஆறு நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றவும் வலியு றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.