districts

img

ஆட்சி மாற்றம் நிகழட்டும் தமிழகம் தலை நிமிரட்டும்

கோவை, மார்ச் 5-

ஆட்சி மாற்றம் நிகழட்டும்,  தமிழ கம் தலை நிமிரட்டும் முழக்கத்தை முன்வைத்து கோவை, திருப்பூரில் வியாழனன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்  பல் லாயிரக்கணக்கானோர் பங்கேற் றனர்.

ஆட்சி மாற்றம் நிகழட்டும்,  தமிழ கம் தலை நிமிரட்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்து  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி பகுதி யில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்கள் யு.கே.வெள் ளிங்கிரி, என்.வி.தாமேதரன் முன் னிலை வகித்தனர். சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் வரவேற்புரையாற்றினார். இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது  செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அர சியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், எம்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, வி.பெருமாள், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.மனோகரன், ஆர்.வேலு சாமி, என்.ஜெயபாலன், கே.அஜய் குமார், என்.பாலமூர்த்தி, கே.எஸ். கனகராஜ், எஸ்.அமுதா உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற னர். முடிவில் சிபிஎம் கோவை வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன் நன்றி கூறினார்.

திருப்பூர்

திருப்பூர் யூனியன் மில் ரோடு  ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் வியா ழன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் பொதுக்கூட் டத்திற்கு, கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் வரவேற்பு ரையாற்றினார். கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி சிறப்புரையாற்றி னார். அவரது உரையை கட்சியின் மாநில கல்விக்குழு உறுப்பினர் திருச்சி அன்வர் மொழிபெயர்ப்புச் செய்தார். இதில், கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.பத்ரி, கே.காமராஜ், ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், நீலகிரி மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, கட்சி திருப்பூர் மாவட் டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி நன்றி கூறினார்.

;