districts

img

காலநிலை மாறுபாடால் வாழை இலை விலை உயர்வு - - எம்.பிரபாகரன் -

நாமக்கல், மே 17- - எம்.பிரபாகரன் - பள்ளிபாளையத்தில் தேவை  அதிகரிப்பாலும், காலநிலை  மாறுபாட்டால் வரத்து குறைந்ததா லும் வாழை இலை விலை கணிச மாக அதிகரித்துள்ளது. எந்தவித உணவாக இருந்தா லும் வாழை இலையில் வைத்து  உண்டால் மட்டுமே ஒருவித திருப்தி கிடைக்கும். இதனாலே என் னவோ காலங்காலமாகவே ஒவ் வொரு விசேஷ நிகழ்வுகளிலும், சாப்பாட்டு பந்தியில் வாழை இலை யிலே உணவு பறிமாறுவது ஒரு  பாரம்பரிய நிகழ்வாகவே பார்க்கப் படுகிறது. வாழை இலைக்கும் ஏரா ளமான மருத்துவ குணங்கள் உள் ளன. இப்படி உணவு சங்கிலியில் தவிர்க்க முடியாத ஒரு பிணைப் பாக இருக்கும் வாழை இலைகள் விலை தற்போது கணிசமாக அதிக ரித்துள்ளது, உணவக ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையத்தில் ஏராள மான வாழை இலை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்க ளாக வாழை இலையின் விலை  ஏற்றம் கண்டுள்ளதாக வியாபாரி கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் இதுகுறித்து பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் உள்ள வாழை இலை வியாபாரிகள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பாக 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு மூன்று ரூபாய்க்கு விற்பனை யான நாள் முதலே இந்த தொழி லில் நாங்கள் இருந்து வருகிறோம். தற்போது அதே 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல்  ரூ.2 ஆயிரம் வரை, ஒவ்வொரு சீச னுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது. சமீப காலமா கவே பிளாஸ்டிக் பயன்பாடு அதிக ரித்த நிலையில், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகளின் தொடர் விழிப்பு ணர்வு காரணமாக ஓரளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாடுகள் குறைக் கப்பட்டு, வாழை இலையில் உணவு பண்டங்களை வழங்கும் போக்கு  அதிகரித்து வருகிறது. இதன் கார ணமாகவும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது. முக்கிய மாக, திருமண விசேஷ நாட்களில் மட்டுமே வாழை இலைகள் கூடு தல் தேவை ஏற்பட்டு, விலை ஏற்றம் காணும். ஆனால், தற்போது தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மாறி, ஆங்காங்கே மழை பெய்து வருவதால், இயற் கையின் சூழல் மாறி வாழை இலை யின் விலை ஏற்றம் கண்டுள்ளது. 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு  தற்போது ரூ.1500 முதல் ரூ.2 ஆயி ரம் வரை ஏற்றம் கண்டுள்ளது. மேலும், உணவகங்களுக்கும் தினமும் வாழை இலைகளை கட்டா யம் அனுப்ப வேண்டிய தேவை  உள்ளதால், நாங்களும் மிகவும்  சிரமப்பட்டு பல்வேறு மாவட்டங் களில் வாழை இலைகளை வாங்கி வருகிறோம். குறிப்பாக, தூத்துக் குடி மாவட்டம் அதிகளவு வாழை இலைகள் உற்பத்தியாகும் இடமா கும். அங்கு சமீபகாலமாக அதிக ளவு காற்று மற்றும் மழையின் கார ணமாக வாழை மரங்கள் வேரோடு  சாய்ந்து விட்டதாகவும், அதனால் வாழை இலைகள் கிடைப்பதில் சிர மம் ஏற்படும் என அங்குள்ள விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் எங் களுக்கு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உள்ளூரில் தினந்தோ றும் நாங்கள் பல்வேறு வணிக நிறு வனங்கள், உணவகங்கள் சிறிய அளவில் செயல்படும் சாலையோர கடைகளுக்கு வாழை இலைகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படியே வழங்கி னாலும் கூடுதல் விலை வைத்து வாழை இலைகளை விற்க வேண் டிய நிலை ஏற்படுகிறது. யதார்த்த நிலைமை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு கூட வாழை இலை கள் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமையாகவும் உள்ளது. அதையும் மீறி நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள் முதல் செய்யப்படும் வாழை இலை கள் தரமற்றதாகவும், ஆங்காங்கே  கிழிந்தும் உள்ளதாலும், முறையாக அந்த வாழை இலைகளை பயன்ப டுத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் வாடிக்கையாளருக்கும், எங்களுக்கும் ஒருவித மனக்கசப்பு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. தற் போது வைகாசி மாதம் முகூர்த்த சீசன் துவங்கி உள்ளதால், வழக் கத்தை காட்டிலும் தற்போது அதிக ளவு வாழை இலைகள் தேவைப் படுகிறது. தேவை அதிகரிப்பு இருந் தும் வாழை இலை கிடைக்காத நிலை இருப்பதால் வாழை இலை யின் விலை மேலும் பன்மடங்கு  அதிகரிக்கும் சூழல் உருவாகியுள் ளது. சராசரியாக டிபன் இலை ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ஏழு முதல் எட்டு  ரூபாய்க்கு விற்பனை செய்கி றோம். சாப்பாட்டு இலை எட்டு  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட் டுள்ள நிலையில், தற்போது பத்து ரூபாய் முதல் விலை வைத்து விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம். இதுவே மொத்தமாக 500 இலை 1000 இலைகள் என கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வாழை இலைகளையே தர முடியாத நிலைதான் உள்ளது. வெகு விரைவில் இந்த நிலை சரி யாகும் என எதிர்பார்க்கிறோம், என் றனர்.