districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது

சேலம், பிப்.13- சேலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத் தைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து, அதனைக்கொண்டு சேலத்தில் தங்கி வேலை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் சேலம், சன்னியாசி குண்டு பகுதியில் உள்ள வரீங்களா ஜவுளி நிறுவனத்தில் காவல் துறையினர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பணி செய்து கொண்டி ருந்த ஒன்பது பேரை, பிப்.11 ஆம் தேதியன்று கிச்சிப்பாளை யம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்ப தும், கர்நாடகா முகவரியில் போலியான ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை தயார் செய்து சேலத்தில் தங்கி, ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றியது தெரியவந்தது. தொடர்ந்து,  சட்டவிரோதமாக குடியேறியதாக 6 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை

சேலம், பிப்.13- தாரமங்கலம் அருகே உள்ள கிரா மத்தைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒரு வர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், மனவேதனையடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள குருக்குபட்டி கிராமம்,  பவளத்தானூரை சேர்ந்தவர் தமிழ்மணி  (37). பட்டப்படிப்பை முடித்துவிட்டு தறித் தொழில் செய்து வந்த இவருக்கு, செல்வி என்ற மனைவியும், வெண்பா (4)  என்ற மகளும் உள்ளனர். கடந்த சில வரு டங்களாக தமிழ்மணி ஆன்லைன் ரம்மி  சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக பல பேரிடம் வட்டிக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி  தொடர்ந்து விளையாடி பணத்தை இழந் துள்ளார். இதனால் கடந்த சில மாதங்க ளாக மன அழுத்தத்தில் தமிழ்மணி இருந்து வந்துள்ளார். மேலும், தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு  தவணை கட்டாததால், அந்நிறுவன ஊழி யர்கள் தமிழ்மணியின் வீட்டிற்கு நேரில்  சென்று பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், அவரால் பணத்தை திரும்ப செலுத்த முடிய வில்லை. இதனால் தமிழ்மணி கடந்த 2  மாதங்களுக்கு முன்பு மதுவில் விவசா யத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து குடித்துள் ளார். இதையடுத்து மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஓமலூர், கோவை ஆகிய பகுதியில் உள்ள தனி யார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தமிழ் மணி உயிரிழந்தார். இதுகுறித்து அவ ரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்

தருமபுரி, பிப்.13- ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோ கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள காவாக்காடு காலனியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இத்தொட்டி மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்து காணப்படுவ தால், தொட்டிக்கு குடிநீரை ஏற்ற முடிய வில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசம டைந்த அப்பகுதி மக்கள் பெரும்பாலை -  மேச்சேரி சாலையில் புதனன்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது பழு தடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, சீராக குடிநீர் விநியோகிக்கப்படும், என அதிகாரி கள் உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் சேலம், பிப்.13- சேலம் மாவட்டத்தில் ரூ.41.59 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் மாவட்டத்தில் பல் வேறு துறைகளில் ரூ.41.59 கோடி மதிப்பீட்டில் 20 புதிய கட்டிடங்களுக்கான அடிக் கல் நாட்டு விழா, அஸ்தம் பட்டி பகுதியிலுள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற் றது. சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு, புதிய திட்டப்பணி களை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதன் பின் அவர் பேசுகையில், மற்ற மாநிலங்கள் பார்த்து வியக் கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறார். ‘கல்வியும், மருத் துவமும்’ தனது இரண்டு கண்கள் என தொடர்பு கூறி வரும் முதல்வர், கடந்த 4  ஆண்டுகளில் கல்வித்து றைக்கு மட்டும் ரூ.1 லட்சத்து  60 ஆயிரம் கோடிக்கு மேல்  நிதி ஒதுக்கி உள்ளார். காலை  சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை இதர மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளும் பின்பற்று கின்றன, என்றார்.

தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை குறைக்க முயற்சி
ஒன்றிய அரசு மீது கொளத்தூர் மணி குற்றச்சாட்டு

சேலம், பிப்.13- மும்மொழி கொள்கையை பின்பற்ற வில்லை என்பதற்காக, தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க ஒன்றிய அரசு முயற்சிப்ப தாக, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றஞ்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட் டுள்ள உயர் கல்விக்கான வரைவு கொள் கையை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழ கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர் களிடம் பேசுகையில், பல்கலைக்கழக மானி யக்குழு வெளியிட்டுள்ள உயர் கல்விக்கான வரைவு கொள்கையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மக் கள் வரி பணத்தில் மாநில அரசு நடத்தும் பல் கலைகழகங்களின் துணைவேந்தரை மாநில அரசே தேர்ந்தெடுக்க உரிமை இல்லை என் பது கல்வியை சாகடிக்கும் நிலை. மேலும், மருத்துவ உயர்கல்வியில் 50க்கு 50க்கு இட ஒதுக்கீடு என்கிற நிலை மாறி, தற்போது முழு வதும் ஒன்றிய அரசு வசம் சென்று விட்ட தாகவும், மும்மொழி கொள்கையை பின்பற்ற வில்லை என்பதற்காக, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வேறு மாநிலங்களுக்கு வழங்கியதோடு, தமிழ்நாட் டின் கல்வித்தரத்தை குறைக்கவே ஒன்றிய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக, அவர் குற் றஞ்சாட்டினார். இதேபோன்று, கோவை, ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களிலும், திவிக சார்பில் ஒன் றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம் ஈரோடு, பிப். 13- பர்கூர் மலை கிராம ஊராட்சி மேற்கு மலைப் பகுதி களான தாமரைகரை உள்ளிட்ட பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, பர்கூர்  மலை கிராம ஊராட்சி மேற்கு மலைப் பகுதிகளான தாமரை கரை, கொங்காடை சாலை முதல் தம்முரெட்டி வரை நபார்டு கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.97 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. அதே போல கொங்காடை ரோடு முதல் கொங்காடை பெரியூர் ஒசூர் வன எல்லை வரை நபார்டு  கிராம சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.ஒரு கோடியே 77 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி களை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் புதனன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொது மக்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

ஆகாசராயர் கோவில் தடுப்புச் சுவர்: நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

அவிநாசி, பிப்.13 – அவிநாசி அருகே ஆகாசராயர் கோவிலில் தடுப்புச் சுவர் கட்டும் பிரச்ச னையில் தீர்வு எட்டப்படாததால் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக் கல் செய்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பா ளையம் ஊராட்சியில் பழமை வாய்ந்த  ஆகாசராயர் திருக்கோவில் அமைந் துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத் திற்காக பல்வேறு பராமரிப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கோவிலில் உள்புறம் சுற்றியும் சுவர்  எழுப்பப்பட்டு வருகிறது. இப்பணியை ஒரு தரப்பினர் மேற் கொண்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள்  ஒன்றிணைந்து இதைப்பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினர். திருக்கோவிலில் கிடாய்  வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு  செய்வது வழக்கமாக உள்ளது. இதனை  தடுக்கும் வகையில் ஒருசாரர் முயற்சி மேற்கொள்வதைக் கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இக் கோவிலில் அவிநாசி சுற்று வட்டார  பெரும்பான்மையானோர், அருந்ததி யர் மக்கள் மட்டுமன்றி, அனைத்து சமு தாயத்தின் ஏழை எளிய மக்களும் குறைந்த வாடகைக்கு பயன்படுத்தி வரு கின்றனர். இதை தடுக்கும் வகையில் தடுப்புச்  சுவர் எழுப்பி வருவதற்கும் ஆலோச னைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக் கப்பட்டது. அத்துடன் மாவட்ட ஆட்சியரி டம் பலமுறை மனு கொடுத்தும் இப்பி ரச்சனைக்கு எவ்வித தீர்வும் எடுக்க வில்லை, இதன் காரணமாக வழக்கறி ஞர் சத்தியமூர்த்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை நாடியுள் ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளார்.

அம்பேத்கர் சிலை மட்டும் இல்லையே!

அம்பேத்கர் சிலை மட்டும் இல்லையே! கோயமுத்தூரில் திரும்பிய சாலை எங்கும் புதிய சிலை கள் வைக்கப்படுகின்றன. புதிதாக வடகோவையில் அட்லஸ்  சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் சிறுமி  புத்தகப் படிக்கட்டில் ஏறும் சிலை என திறக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக கோயமுத்தூரில் அண் ணல் அம்பேத்கர் சிலை நகரில் அமைக்கப்பட வேண்டும்  என ஜனநாயக இயக்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.  கோயமுத்தூர் மாநகராட்சி, அம்பேத்கர் சிலை அமைக்க  மாமன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி யது. நீதிமன்றம் எதிரில் உள்ள ரவுண்டானாவில் அந்த சிலை  நிறுவ அனுமதி வழங்கி விட்டது. ஆனால் அம்பேத்கர் சிலை  கோயமுத்தூரில் நிறைவேறாத கனவு.  கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் அம்பேத்கரின் சிலை  அமைக்கப்படாதது ஒரு நுட்பமான சாதி அரசியல். தற்போது  அம்பேத்கர் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் நிமிர்ந்து நிற்கின்றார். அம்பேத்கரை நவீன இந்தியாவின் சிற்பி களில் ஒருவர் என பார்க்கும் பார்வை இல்லாமல் போனது  அவலம். சமூக நீதி என்பது அதன் அடையாளங்களை பாது காப்பது மற்றும் அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்  செல்வதும் அடங்கும். அம்பேத்காரின் சிலையை கோயமுத்தூரில் நிர்ணயம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். எழுத்தாளர், செயற்பாட்டாளர் ச.பாலமுருகன்

ஆன்லைன் வர்த்தக மோசடி: ரூ.15.5 லட்சத்தை இழந்த மருத்துவர்

கோவை, பிப்.13- ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த மருத்துவர்  ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம்  சிக்கி ரூ.15.5 லட்சம் இழந்துள்ளார். கோவை மாவட்டம், சாய்பாபா கால னியைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர்  டாக்டர் கார்த்திக் (44). இவர் வியாழ னன்று கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,  யூடியூபில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான வீடியோவைப் பார்த்த போது, ஒரு லிங்கைக் கிளிக் செய்து, அதன் மூலம் “49 அபஸ்டாக்ஸ் வெல்த்  குரூப்” என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்தக் குழுவில் இருந்த நபர்கள், பங்கு வர்த்தகம் தொடர்பான டிப்ஸ்களை வழங்கி வந்த னர். இதனை நம்பி அந்த லிங்க் மூலம் “UP Institutions” என்ற போலியான வர்த்தக செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர், அவர்கள் கூறி யபடி, ஒன்பது தவணைகளில் ரூ. 15.5  லட்சத்தை அந்த செயலியில் முதலீடு  செய்துள்ளார். அவரது கணக்கில் பணம்  இருப்பதாகவும், அதை எடுக்கலாம்  என்றும் அவருக்கு காண்பிக்கப்பட்டுள் ளது. ஆனால், அவர் பணத்தை எடுக்க முயன்றபோதுதான், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.