உதகை, டிச.16- நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ் நிலம் வழங்க ஆட்சியரிடம் வலியுறுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பண்டைய பழங்குடி யினர் தலைவர் ஆல்வாஸ் மாவட்ட ஆட்சியருக்கு அளித் துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, உதகை தாலுகாவுக்குட்பட்ட சோலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான தோடர் மற்றும் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வரு கின்றனர். 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கிராம சபை கூட்டத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் நிலம் கோரி மனு அளித்துள்ள னர். ஆனால், தங்களுக்குரிய நிலங்களை வழங்காமல் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்நிலை யில், சோலூர் பகுதியில் மேய்ச்சல் நிலங்க ளில் விவசாயம் செய்து வருபவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ள னர். மேலும் இவர்களை ஆக்கிரமிப்பாளர் கள் என அந்த வழக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் சார்பில் பழங் குடியினர் நலத்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் ஆஜராகி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பிரச்சினை களை எடுத்துக் கூற வேண்டும். மேலும், வனத்துறையினர் நாங்கள் தற் போது விவசாயம் செய்து வரும் நிலையில் அதனை தடுக்கக்கூடாது. எங்களை அந்த நிலங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வன உரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு சேர வேண்டிய நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.