அவிநாசி,மே 13- அவிநாசி அருகே பாரம்பரிய துணைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, இரண்டு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில் கதிரேசன் (35) என்பவருக்கு சொந்தமான சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரி யம் கொண்ட சுமங்கலி ஜவுளிக்கடை உள்ளது. அடுக்கு மாடிகளில் இயங்கி வரும் இந்த துணிக்கடையில் திங்கட்கிழமை அதி காலை தரைத்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயானது கடைக ளில் முழுவதுமாக பரவி மளமளவென எரிந்தது. தகவலறிந்து வந்த அவிநாசி மற்றும் திருப்பூர் தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மற்ற தளங் கள் மற்றும் பக்கத்து கடைகளுக்கு தீப்பர வாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தால், இரண்டு கோடி மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு கார ணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.