ஈரோடு, ஜூன் 28- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா விவசாயிகளை அதட்டிப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரண மாக கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டம் துவங்கியவுடன் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதன்பிறகு விவசா யிகள் சங்க பிரதிநிதிகள் பேசுமாறு அழைக்கப்பட்டனர். சிலர் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 4 மாதங்க ளுக்குப் பிறகு நடைபெறும் கூட்டம் நடைபெறுவதால் சற்று முன்பின் தான் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்த பிறகு அதிகாரிகள் அமைதியாகினர். முன்னதாக, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி பேசும்போது, கோபி வட்டம், கலிங்கியம் அருகே கீழ்பவானி கால்வாய்க்கு நிலத் தைக் கொடுத்து விட்டு அதில் எஞ்சிய நிலத்தில் அரசு விதிக் கும் தீர்வை செலுத்தி சாகுபடி செய்து வந்தனர். அந்த நிலத்தை துண்டாக்கும் வகையில் அரசு வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை யினர் மற்றும் பொதுப்பணித்து றையினர் முன்னிலையில் சாலை அமைத்துக் கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதா கக் காலில் விழுந்து கதறும்போதும் பலனில்லை என்றார். மேலும், மொடக்குறிச்சி வட்டம், வடுக பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களின் பாசன நிலங்கள் பாசன வசதி பெற முன்னாள் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தான் கொடுத்த மனுக்களில் குறிப்பிட் டுள்ள கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர் நீங்கள் மாநில அளவில், நாட்டு அளவில் எதுவாக இருந்தாலும் இங்கே நீங்கள் மாவட்ட தலைவர் தான். மற்ற அனைவரையும் விட நீங்கள் தான் கூடுதலாகப் பேசியுள்ளீர் என அவ ரது பேச்சை நிறுத்தச் செய்தார். அதன் பிறகு சில விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினர். பின்னர் அலுவலர்கள் பதில் அளித்தனர். அப்போது சிலர் குறுக்கிட்டு விளக்கங்களைப் பெற்றனர். அப்போது, ஏஎம்.முனு சாமி தான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை எனக் கேட்டார். அப்போதும் குறுக்கிட்ட ஆட்சியர் நிறுத்துங்கள் என்று அதட்டிப்பேசினார். மேலும், நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் பதில் சொல்லும்போது தடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். விவசாயிகள் குறைதீர் கூட்டத் திற்கு நீங்கள் புதுசா என அவமரியா தையாகவும், மிரட்டும் தொனியி லும் எச்சரிக்கை விடுத்தார். இதனை எதிர்பார்க்காத விவசாய சங்க பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்த னர். அப்போது, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு கோரிக்கை தொடர் பாக, அதிகாரிகள் பதில் அளிக்கும் போது விளக்கம் கேட்டார். அப் போதும் கோபத்துடன் குறுக்கிட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன் கரா, அதிகப் பிரசங்கித்தனம் வேண் டாம் அமருங்கள் என்றும், ‘இந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசுவ தற்கு ஒரு நேரம் ஒதுக்கினால், அதற் குள் பேசி முடிக்க வேண்டும். பள்ளி மாணவர்களைப் போல் ‘டைம்’ பெல் அடித்தால் நன்றாக இருக் காது. இந்த கூட்டத்தில் வாக்குவா தம் செய்யவோ, அதிகப்பிரசங்கத் தனமாகவோ பேசக்கூடாது என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவ டிக்கை விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.