திருப்பூர், ஜூலை 7- ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு பெற்றுத்தர அரசு நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள் ளது. கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூரில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட் டமைப்பின் செயலாளர் பி.கோ பாலகிருஷ்ணன் தலைமையிலும், தெக்கலூர் பொன்னுசாமி, அவி நாசி முத்துசாமி ஆகியோரின் முன் னிலையிலும் நடைபெற்ற இக்கூட் டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர். இக்கூட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர்களுக்கு புதிய கூலி உயர்வு வழங்க உரிய தலையீடு செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களிடமும், தொழிலாளர் துறையிலும், கைத்தறி துணி நூல் துறையிலும் மனு கொடுக்கப்பட் டிருந்தது. எனினும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக இக் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் அரசுத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, இரு மாவட்ட நிர்வாகங் களும் தொழிலாளர் துறை மற்றும் துணி நூல் துறை அதிகாரிகளும் மேற்கண்ட கூலி உயர்வு கோரிக்கை மீது மேல் நடவடிக்கை எடுத்து ஜவுளி உற்பத்தியாளர் களை அழைத்துப் பேசி புதிய கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சாதா விசைத்தறி தொழில் மற்றும் விசைத்தறியாளர்கள் வாழ் நிலையை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின் கட்ட ணத்தை உயர்த்தும் மின்வாரிய முடிவில் இருந்து விசைத்தறி III ஏ 2 கட்டண விகிதத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் விசைத்தறியாளர்கள் மற்றும் லட் சக்கணக்கான விசைத்தறி தொழி லாளர்கள் குடும்பங்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க தமிழக முதல் வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புதிய கூலி உயர்வு கோரிக்கை குறித்து இந்த மாவட்ட அமைச்சர்கள், கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத் தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.