districts

கனமழையால் வீடுகள் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

உதகை, ஜூலை 27- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள் சேதமடைந்தன. மேலும், மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டி கள் சிரமத்திற்குள்ளாகினர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து  வருகிறது. பலத்த காற்றுடன் கடும் குளிர் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் சாலை யோரம் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதன் படி உதகையை அடுத்த எம்.பாலடாவிலி ருந்து மேல்கவ்வட்டி செல்லும் சாலையில் சண்முகம் என்பவரது வீடு மீது மரம் முறிந்து விழுந்தது. வீடு சேதமடைந்ததால் பொருட் களை அருகில் உள்ள வீட்டில் மாற்றி வைத் துள்ளனர். இதேபோல், குந்தா தாலுகாவுக் குட்பட்ட பிக் கட்டி சிவசக்தி நகரில் பிரவீதா என்பவரது வீடு மழைக்கு சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து உடனடி நிவாரணத் தொகையாக ரூ.4,500 அவருக்கு வழங்கப் பட்டது. பாடந்தொரை கிராமத்தில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையில் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்திலிருந்த காட்டு மரம் மின்  கம்பத்தின் மேல் விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். கனமழையால் ஆங்காங்கே மரங்கள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விழுந் துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழ னன்று காலை கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் தேவன் என்பவரது வீட்டின் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தது. இதில் வீடு சேத மடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல் லாததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். எனவே, பொதுமக்கள் வசிக்கும் பகுதியின்  அருகேயுள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர். உதகையில் கடும் குளிர் நிலவுவ தால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், பனிமூட்டம் அதிகளவில் இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய  விட்டபடி வாகனம் ஓட்டினர்.

போக்குவரத்து பாதிப்பு

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கூடலூர் - பாட் டவயல் சாலையில், பாடந்தொரை என்ற பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த தால். சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு - கேரளா இடையேயான போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதுகுறித்து தக வலறிந்த கூடலூர் தீயணைப்பு நிலையப் பணி யாளர்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதை யடுத்து 1 மணி நேரத்துக்குப் பிறகு வழக் கம்போல வாகனப் போக்குவரத்து தொடங்கி யது.  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காட்டேரி அணைக்கு வரும் தண் ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால்,  அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. இந்த நீர் காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலை விலிருந்து பார்க்கும்போது வெள்ளி இழை போல் காட்சியளிக்கிறது. இதனை உதகையி லிருந்து கேத்தி பாலாடா, காட்டேரி அணை வழியாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளை யம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு  ரசித்து செல்கின்றனர். இதனை புகைப்பட மும் எடுத்துச் செல்கின்றனர். இன்னும் ஒரு  சில தினங்கள் மழை பெய்தால், அருவில் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள னர்.  இதேபோன்று மாவட்டத்திலுள்ள அவ லாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் உள்ளது.
 

;