districts

img

உயர்கல்வியில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிடுக

தருமபுரி, ஜூலை 11- உயர்கல்வியில் துப்புரவு பொறி யியல் துறையை உருவாக்க வேண் டும் என வலியுறுத்தி, ஜூலை 19 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெ றும் என தீண்டாமை ஒழிப்பு முன் னணி அறிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பேரவை கூட் டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன் தலைமை  வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் கே.சாமுவேல்ராஜ், துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி.மாதை யன், மாவட்டப் பொருளாளர் கே. கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், மலக்குழி மரணத்தை தடுக்க உயர் கல்வியில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஜூலை 19 ஆம் தேதியன்று தருமபுரி, அரூர், பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், சாதி ஆணவப்படுகொ லையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஏழை மற்றும் பட்டியலின மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவுக் கான இடத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்க வேண்டும். பழுத டைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரும புரி மாவட்டம் முழுவதும் பல்வேறு  கிராமங்களில் தீண்டாமை வன்கொ டுமை பல்வேறு வடிவங்களில் நடந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக  அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டச் செயலாளராக ஏ.சேகர் தேர்வு செய்யப்பட்டார்.