districts

img

கூட்டுறவு சங்க இயக்குநர் பயிற்சி கூட்டம்

அவிநாசி, செப். 24 – அவிநாசியில் கூட்டுறவு சங்க இயக்குநர் பயிற்சி மற்றும்  கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம்  வடுகபாளையம், நடுவச்சேரி, ராக்கியாபாளையம், உள் ளிட்டு பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செயல்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் இவர்கள் கடந்த நான்கு ஆண்டுக ளில் பணிபுரிந்த அனுபவம் குறித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டுறவு ஊழி யர் சங்கத்தின் மாநில நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்க ளாக பணியாற்றுவது குறித்தும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு குறித்தும் உரையாற்றினார். இக்கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற் றது. இதில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன  மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், மாநிலத் தலைவர்  பி.முத்துச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகம்,  வேலுச்சாமி, தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;