திருப்பூர், நவ.25 - திருப்பூர் மாவட்டத்தில் தங்கியிருக் கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் பொருட்களை பெறுவதற்காக நியாய விலைக் கடைகளில் கூடுதல் ரேசன் பொருள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிஐடியு கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர் சங்கம் (சிஐடியு) நிர்வாகக் குழு கூட் டம் திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவல கத்தில் ஞாயிறன்று மாவட்டத் தலை வர் பி.கௌதமன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: ரேசன் கடைக ளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அனைத்தும் 100 % முழு ஒதுக்கீடு செய் யப்பட வேண்டும். வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏதுவாக கூடுதலாக 10 சதவீ தம் ரேசன் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் சாக்குகள் மற்றும் சணல் சாக்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வேலை நாட்க ளில் மாலை 6 மணிக்குள் கடைக ளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். விடு முறை நாட்கள் மற்றும் இரவு நேரங்க ளில் ரேசன் பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். வாடகை கட்டிடங்க ளில் இயங்கும் நியாய விலைக் கடை களை உடனடியாக அரசு சொந்த கட்டி டங்களாக கட்டித் தர வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகளில் பழுது ஏற் பட்டுள்ள தரைதளம் மற்றும் மேற்கூரை களை உடனடியாக சரி செய்ய வேண் டும். அனைத்து நியாய விலைக் கடைக ளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூடுதல் ஒதுக்கீடு செய்யக் கோரி மூன்று முறை கடிதங்கள் வழங்கப்பட் டும், கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. டிசம்பர் மாதத்தில் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா ளர் கே.மகேந்திரன் மாவட்டப் பொருளா ளர் பி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.