districts

img

மருத்துவ மாணவி பாலியல் படுகொலை சிஐடியு, மாதர், மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக 24- மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில், மருத்துவ முதுநிலை மாணவி பாலியல் வன்கொ லையை கண்டித்து தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தருமபுரியில் சிஐடியு, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ‌கவிதா தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநிலச் செயலா ளர் ‌சி.நாகராசன், மாவட்டச் செய லாளர் பி.ஜீவா, சிஐடியு போக்குவ ரத்து கழக மண்டலச் செயலாளர் சி.முரளி, மாவட்டதுணைத்தலை வர்கள்  சி.அங்கம்மாள், உழைக் கும் பெண்கள் இணை கண்வீனர் ஆர்.கண்மணி ஆகியோர் உரை யாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் மருத்துவ மாணவியின் படுகொ லைக்கு நீதி கேட்டு சேலம் மேட்டூர் சின்ன பார்க் அருகில் சிஐடியு மற் றும் மாதர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் பி.கே.சிவகுமார் தலைமை ஏற் றார். இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செ. கருப் பண்ணன், சிஐடியு மேட்டூர் அனல் மின் நிலையகிளைச் செயலாளர் எஸ்.செந்தில்வேலன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர்  எஸ். எம். தேவி, சமூகசெயற்பாட்டாளர்பொறியாளர்அனுராதா,சிஐடியு மாவட்டப் பொருளாளர், வீ.இள ங்கோ ஆகியோர் உரையாற் றினர். முடிவில், கே.சண்முகம் நன்றி கூறினார்.  நாமக்கல் இதேபோன்று நாமக்கலில் இந் திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நாமக்கல் பூங்கா சாலை யில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் ஒன்றியச் செயலாளர் ரா. தனுஷ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மணி கண்டன், மாவட்டத் தலைவர்  எம்.லட்சுமணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தே. சரவணன், மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யாழினி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தில் நாமக்கல் ஒன்றிய தலைவர்நவீன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கன்னிகா பிரியதர்ஷினி கார்த்தி முன்னிலை வகித்தனர், நாமக்கல் ஒன்றிய துணைத் தலை வர் அபு நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில், வன் கொலைக்கு ஆளான மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும், பாலியல் குற்றவாளி கள் மீது கடுமையான சட்ட நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும், மருத்துவர்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும், மருத்துவர் பற்றாக்குறையை போக்கிட, மத்திய மாநில அரசு கள் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் முழக்கங்களாக எழுப்பினர்.