districts

img

புதிய ஊதிய மாற்றம் அமல்படுத்திடுக

கோவை, ஆக.8- பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிஎஸ்என் எல் ஊழியர் சங்க கோவை  மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் 10 ஆவது கோவை மாவட்ட மாநாடு கோவை தலைமை தொலைபேசி நிலையத்தில் செவ் வாயன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு தலைமை தாங்கி  மாவட்டத் தலைவர் பி.கல்யாணரா மன் தேசிய கொடியை ஏற்றிவைத் தார். தொழிற்சங்க கொடியை ராபர்ட் ஞானமாணிக்கம் ஏற்றிவைத் தார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலர் அன்புதேவன் வரவேற்று பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் பி. ராஜீ மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக, நடைபெற்ற பிஎஸ் என்எல் உழைக்கும் பெண்கள் மாநாட்டிற்கு விஜேஸ்வரி தலைமை ஏற்றார். லிடியா கிரிஷ்டி  வரவேற்று பேசினார். உழைக்கும் பெண்கள் மாநில அமைப்பாளர் அழகுநாச்சியார் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் கோவை மாவட்ட அமைப்பாளராக சாந்திபிரேமா குமரி மற்றும் இணை அமைப்பாள ராக லிடியா கிரிஸ்டி, விஜேயேஸ் வரி மற்றும் பொதுக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டையொட்டி பிஎஸ்என் எல் மட்டுமே எதிர்காலம் என்கிற  தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், கோவை மாவட்ட முதன்மை பொதுமேலாளர். வி. சங்கர்,  பால்வண்ணன், மற்றும்  அகில இந்திய உதவி பொதுச்செய லர் எஸ்.செல்லப்பா ஆகியோர் உரையாற்றினர். இதில், இன்றைய  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி, மக்களின் ஆதரவு குறித் தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கடந்த 10 வருடங்க ளாக மோடி அரசின் முட்டுக்கட் டைப்பற்றியும் தலைவர்கள் பேசி னர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி சேவை உடனே வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மாற்றம் அமல்படுத்த  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  இதனைத்தொடர்ந்து, மாநாட் டில் புதிய மாவட்டத் தலைவராக பாபு, செயலாளராக செள.மகேஸ் வரன், பொருளாளராக ஏ.எஸ்.சாஹீன் அகமது உள்ளிட்ட 13 பேர்  கொண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாநாட்டில் ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. மாநாட்டில் சங்கத்தின்  மாநிலத் தலைவர் அ.பாபுராதா கிருஷ்ணன், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு  வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சரவணக்குமார் நன்றி கூறினார்.