districts

பாரதியார் பிறந்தநாள் விழா

பென்னாகரம், டிச.12- பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு வாலிபர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாகவி பாரதியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.சபரிராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் எம்.தங்கராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கே.அன்பு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பி. முருகேசன், செந்தில்குமார், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;