வாகனத் தணிக்கை: ரூ.2 லட்சம் அபராதம்
ஈரோடு, ஆக 27- சத்தியமங்கலம் காந்தி நகர் பகுதியில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் வாகனத் தணிக்கையில் போக்குவரத்து காவ லர்கள் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிக ளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட திடீர் வாகனத் தணிக்கையின் போது, விதி முறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 லட்சம் அபரா தம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் -கா்நாடகம் மாநில எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக சமூக விரோதிகள் ஊடு ருவியதாக போலீஸாருக்கு திங்களன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமை யிலான போலீஸார் காந்தி நகா் பகுதியில் திங்கள்கிழமை திடீர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த வாகனங்களின் பதிவு எண், உரிமை யாளர் பெயர் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்னரே வாகனங் களை அனுமதித்தனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் இன்றியும், விதிமுறைகளை மீறியதும் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
வீட்டின் மீது விழுந்த கார்
உதகை, ஆக.27- உதகையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடு வதற்காக விலகியபோது பள்ளத்தில் இருந்த வீட்டின்மீது கார் விழுந்து விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு சென்னையைச் சேர்ந்த வர்கள் காரில் திங்களன்று சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள், உதகை - கூடலூா் நெடுஞ்சாலையில் ஃபிங்கர்போஸ்ட் பகுதி யில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை சாலையோரத்தில் நிறுத்த முயன் றுள்ளனர். இதில், நிலை தடுமாறி பள்ளத்தில் இருந்த வீட்டின்மீது கார் விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப் பாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை, ஆக.27- அன்னூரில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறி முதல் செய்து இருவரை கைது செய்தனர். அன்னூர் காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் காவல் துறையினர், திங்களன்று இரவு அன்னூர் சக்தி சாலை யில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நீலாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன்(35), துடியலூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்(28) ஆகி யோர் பிக்கப் வாகனத்தில் அவ்வழியாக வந்தனர். அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனைக்காக கொண்டுவரப்பட் டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்க ளிடம் இருந்த புகையிலை மற்றும் குட்கா, பிக்கப் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி கோவை சிறை யில் அடைத்தனர்.
அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை
சேலம், ஆக.27- ஓமலூர் உட்கோட்ட காவல் சரக பகுதிகளில், காவல் துறை யின் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் எச்சரிக்கை விடுத்துள் ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்ட காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து காவல் துறை - பொதுமக்கள் கூட்டம், ஓமலூரில் திங்க ளன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓமலூர், தீவட்டிப் பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டா புரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக் கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதில் ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் பேசுகை யில், அனைத்து துறைகளின் அனுமதி பெற்றே விநாயகர் சிலை வைக்க வேண்டும். தகர கூரை, மின் இணைப்பு, தீய ணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். சிலை வைத்துள்ள கூடாரத்தில் 24 மணி நேரமும் ஐந்து பேர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். மசூதி, தேவாலயம் பகுதி யில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட பகுதிக ளில் மட்டும் மாலை 5 மணிக்குள் கரைக்க வேண்டும். மேலும், அனுமதி பெறாமல் சிலை வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மீட்பு
சேலம், ஆக.27- எடப்பாடி அருகே மது போதையில் காதலி வீட் டுக்கு சென்று கிணற்றில் குதித்து, தற்கொலைக்க முயன்ற நபரை தீயணைப் புத் துறையினர் மீட்டனர். சேலம் மாவட்டம், மேட் டூர் அருகேயுள்ள குஞ்சாண் டியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், கொங்க ணாபுரம் அருகேயுள்ள பாலப் பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு பழக்கம் ஏற் பட்டு, காதலாக மாறியுள் ளது. இந்நிலையில், திருச்செங் கோடு அருகே உள்ள தனி யார் கல்லூரியில் இரண் டாம் ஆண்டு பயின்று வரும் மாணவியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் அவரை திருமணம் செய்து கொள்ள லாம் என வற்புறுத்தி உள் ளார். அதற்கு அப்பெண் ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலப்பட்டி அருகே உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற் கொலை செய்து கொள்வ தாக மிரட்டி விட்டு 4 முறை குதித்தவர் 5 முறை மேலே வர முடியாமல் தவித்துள் ளார். இதுகுறித்து அப்பெண் ணின் உறவினர்கள் கொங்க ணாபுரம் காவல் நிலையத்திற் கும், எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் வந்த தீயணைப்புத் துறையி னர் இளைஞரை உயிருடன் பத்திரமாக மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத் தனர். அதன்பின்னர் போலீ சார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் பெருந்திரள் முறையீடு
திருப்பூர், ஆக.27- திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பாக ஏஐடியுசி கட்டிடத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீட்டு போராட் டம் நடைபெற்றது. நலவாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன் னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டப்படி இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும், அனைத்து பண பயன்களும் மனு செய்த 30 நாட்களில் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந் திரள் முறையீடு போராட்டம் திருப்பூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கணேசன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் என்.சேகர், மாவட்டத் தலைவர் எம்.மோகன் உள்ளிட் டோர் உரையாற்றினர். சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சாலை விபத்தில் மாணவர் உயிரிழப்பு
திருப்பூர், ஆக.27- ஊத்துக்குளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தைச் சோ்ந்தவர் நவீன்குமார் (20). இவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஊத்துக் குளி ஆர்.எஸ். படியூர் சாலையில் இருசக்கர வாகனத் தில் ஞாயிறன்று இரவு சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாக னத்தின் மீது இவரது வாகனம் மோதியது. இதில், தலை யில் பலத்த காயமடைந்த நவீன்குமாருக்கு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் உயர் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திங்க ளன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊத்துக்குளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை
திருப்பூர், ஆக.27- 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் வேளாண்மை அலுவலர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விதைகள் தரத்துடன் இருந்தால் மட்டுமே உற்பத்தி அதிகரித்து நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும். வேளாண் உற்பத் தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில், விதைகளின் பங்கு மிக முக்கியமா னவை. நல்ல தரமான விதைகள் என்பது இனத்தூய்மை, புறத் தூய்மை, முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதத்து டன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பயிர்களுக்கு இடை யிலும் ஈரப்பதத்தின் சதவீதம் மாறுபடும். நெல்லில் 13 சதவீதம், கம்பு, கேழ்வரகு 12 சதவீதம், உளுந்து, பாசிப் பயிறு, நிலக்கடலை, எள் ஆகியவற்றில் 9 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும். மாலத்தியான் 0.1 சதவீத கரைசலை மூட்டைகள் நனையாமல் தானியங்கள் மேல் படாமல் தெளிப்பதால் பூச்சிகள் கட்டுப்படும். இதுதவிர இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விதை மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். விதை உள்ளிட்டவற்றின் கூடுதல் தகவல்களைப் பெற பல்ல டம் விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
திருப்பூர், ஆக.27- சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு போக்குவரத்து காவல் துறை சார் பில், சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் திருப் பூர் புதிய பேருந்து நிலையம் அருகே திங்களன்று மாலை ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வாக னம் ஓட்ட வேண்டும். சாலை விதிமுறைகளை பின்பற்றி விபத்துகளை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இன்று “மக்களுடன் முதல்வர்” முகாம்
திருப்பூர், ஆக.27- உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியப் பகுதிகளில் புத னன்று (இன்று) “மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடைபெற வுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களுடன் முதல் வர்” திட்டத்தினை திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தும் பொருட்டு, 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 13 வரை 76 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் புதனன்று (இன்று) திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொரவலூர் ஸ்ரீஅண்ணன்மார் சுவாமி திரு மண மண்டபத்தில் மேற்குப்பதி, பட்டம்பாளையம், சொக்க னூர், தொரவலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தேவனூர்புதூர் குலவிளக் கம்மன் மண்டபத்தில் தேவனூர்புதூர், செல்லப்பம்பாளை யம், ராவணாபுரம் மற்றும் புங்கமுத்தூர் ஆகிய ஊராட்சி களுக்கும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேடப் பட்டி கணியூர் மெயின்ரோடு அக்சரா திருமண மஹா லில் சோழமாதேவி, மைவாடி, வேடப்டடி ஆகிய ஊராட்சி களுக்கும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொடுவாய் வி.எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் அலகுமலை, வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன் அந்தத்த ஊராட்சிகளில் முகாம் நடைபெறும் இடங்களில் சமந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தீர்வு காண லாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சிக்கிய தூய்மைப்பணி வாகனம்
நாமக்கல், ஆக. 27- பள்ளிபாளையம் நகராட்சியில் வழக்கில் சிக்கிய தூய் மைப்பணி வாகனம் மழை, வெயிலில் காய்ந்து வருகிறது. வழக்கை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. 21 வார்டுகளிலும் தினந்தோ றும் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடம் குப்பைகளை பெற்று வருகின்றனர். இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார் பில் பேட்டரி வாகனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பேட்டரி வாகனத்தின் மூலமாக தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி பாளையம் திருச்செங்கோடு சாலையில் விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளிபாளையம் போலீசாரால், தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த பேட்டரி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனம் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாத காலத் திற்கு மேலாக வழக்கு நிலுவையில் இருப்பதால், புதிதாக வாங்கப்பட்ட பேட்டரி வாகனம் துருப்பிடித்து, மழை வெயி லில் காய்ந்து பயனற்று போகும் நிலை உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை வாகனம் வராததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் பாதிப்பு உருவாகியுள்ளது. எனவே அரசு பொது சொத்தை பாதுகாக்கும் வகையில் பள்ளிபாளை யம் போலீசார் விரைந்து வழக்கை முடித்து, நகராட்சி பேட்டரி வாகனத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்கின்ற னர் சமூக செயற்பாட்டாளர்கள்.
மண் சாலையாக மாறிய தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
சேலம், ஆக.27- ஏற்காட்டில் மண் சாலையாக மாறிய தார்ச்சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மலைக்கி ராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், நாகலூர் ஊராட்சிக்குட்பட்ட கொளகூர் செல்லும் கிராம சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இச்சாலையை சுற்றுலாப் பயணிகள், மலைக்கிராம மக்கள், பள்ளிக் குழந் தைகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில், இச்சாலை கடந்த சில மாதங்களாக அதிகளவில் பெய்த மழையால் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மண்சாலையாக மாறியுள்ளது. இந்த சாலையை சீரமைக்க வும், கிராம சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றவும் வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம டைந்த மலைக்கிராம மக்கள், திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று பொது மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்ற னர்.
தொட்டபெட்டா காட்சிமுனை மீண்டும் திறப்பு
உதகை, ஆக. 27- உதகையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மீண்டும் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாத்தலமாக தொட்ட பெட்டா காட்சிமுனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி காட்சிமுனையைக் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல் லும் சாலையில் இருந்த சோதனைச் சாவடி பகுதியில் போக்கு வரத்து நெரிசல் காரணமாக, சோதனைச் சாவடியை வேறு இடத்தில் அமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தன. இதனால், கடந்த ஆக. 20 முதல் 25 வரை தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சோதனைச் சாவடி அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல்ல திங்கட்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அனு மதிக்கப்படுகின்றனர். ஒருவாரத்துக்குப் பின் மீண்டும் அனு மதிக்கப்பட்டதால் தொட்டபெட்டா காட்சிமுனையை சுற்று லாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
குழந்தையை விற்ற தாய் கைது
கோவை, ஆக.27- சாமிசெட்டிபாளையம், சின்னகண்ணான் புத்தூர் பகுதி யைச் சேர்ந்து தம்பதியினர் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்றது தெரியவந்த நிலை யில், தாய் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவர் அப்பகுதியில் உள்ள பனி யன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரு கிறார். இவருடைய மனைவி நந்தினி இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு மீண்டும் கடந்த 14 ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ஆதிகணேஷ் - நந்தினி தம்பதியினர் விற்க முடிவு செய்தனர். இந்நிலையில், இந்த தம்பதியினர் குழந்தையை விற் பனை செய்ய இருப்பதை அறிந்த கஸ்தூரி பாளையத்தை சேர்ந்த இடைத்தரகர் தேவிகா என்பவர் நந்தினியை அணு கினார். இருவரும் கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு குந்தையை ரூ. 1 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளனர். அதற்கான கமிஷனையும் தேவிகா பெற்றுள் ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஹெல்ப் லைன் மைய அதிகாரிகள் பெரிநாயக்கன் பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை விற்ற தாய் நந்தினி இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா, அந்த குழந்தையை வாங்கிய பெண் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அத்துடன் அந்த பெண் குழந்தையையும் மீட்ட னர். தொடர்ந்து இதுபோன்ற தேவிகா யாரிடமாவது குழந் தையை வாங்கி விற்பனை செய்து உள்ளாரா? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
அணை நீர்மட்டம் உயர்வு: வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை
தருமபுரி, ஆக.27- வள்ளிமதுரை, வரட்டாறு அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலை யில், பாசன வாய்க்கால்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை 34.5 அடி கொள்ளளவில் அமைந்துள்ளது. வள்ளிமதுரை, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி உள் ளிட்ட மலைப்பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை யடுத்து, அணையின் நீா்மட்டம் 30 அடி யாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் கனமழை பெய்தால், அணை முழுமையாக நிரம்பும் சூழல் உள்ளது. இதனிடையே, வள்ளிமதுரை வரட்டாறு அணையின் பாசன வாய்க்கால்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்ப டுத்தி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப் புடையாம்பட்டி, பொன்னேரி, வேப்பம் பட்டி, செல்லம்பட்டி ஊராட்சிகளுக்குட் பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள் ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்கலாம். ஆனால், போதிய பராம ரிப்பு இல்லாத காரணத்தால் வள்ளி மதுரை வரட்டாறு அணையின் வலது, இடதுபுற கால்வாய்கள் தூர் அடைந் துள்ளது. இதனால் பருவ காலங்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற் படும். எனவே, வள்ளிமதுரை வரட்டாறு அணையின் இடது, வலதுபுற வாய்க் கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
தனியார் பேருந்து – லாரி மோதி விபத்து
சேலம், ஆக.27- சேலத்தில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில், பேருந்தில் பயனித்த 20 பேர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அருகே உள்ள தேவாங்கர் காலனி, அரூர் - சேலம் நெடுஞ்சாலையில், செவ் வாயன்று அரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த பேருந்தும், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். லாரியில் மாட்டிக் கொண்ட லாரி ஓட்டுநர் வேடியப்பன்னை, 2 மணி நேர போராட் டத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிவேகமாக இயக் கிய பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.