districts

img

தனியார் நிறுவனங்களுக்காக விவசாயத்தை அழிப்பதாக குற்றச்சாட்டு

சேலம், செப் 24- வீரபாண்டி அருகே விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தனியார் நிறுவனத்திற்காக விளை நிலங்கள் அரு கில் உயரழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பாலம் பட்டியிலிருந்து சீரகாபாடி செல்லும் சாலையில் உள்ள விசைத்தறி கூடத்திற்கு உயரழுத்த மின்சார இணைப்பு வழங் குவதற்காக மின் கம்பம் பதிக்கும் பணி கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்றது. இப்பாதை அகலம் குறை வாக இருப்பதாலும், இப்பாதைக்கு இருபுறமும் விவசாய நிலங்களும், அதில் தேக்கு, தென்னை, வேம்பு உள்ளிட்ட மரங் கள் இருப்பதாலும் மின்கம்பம் அமைத்தால், பயிர்கள் பாதிக் கப்படும் எனக்கூறி, புஞ்சை காட்டுவளவு பகுதி பொது மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மின்கம்பம் பதிக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், செவ்வாயன்று மின்வாரிய அலுவலர்கள் ஆட்டையாம்பட்டி காவல்துறையி னர் உதவியுடன், அப்பகுதியில் மின்கம்பம் அமைக்கும் பணி யினை மேற்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். விவ சாயிகளின் எதிர்ப்பையும் மீறி, மின் கம்பி கொண்டு சென்ற தால் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. சாலையின் இருபுறமும் உள்ள விவசாயிகள் கடுமை யான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஜேசிபி இயந்தி ரத்தின் மூலம் மின் கம்பங்கள் பதிப்பதற்கு குழி வெட்டிய போது, குழிக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அப்போது போலீசா ருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. இதனையடுத்து போலீசாரின் உதவியுடன் அங்கு மின் கம்பம் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மின்வாரிய அதிகாரி கள் வேண்டுமென்றே விளை நிலங்களில் உள்ள மரங்க ளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் உயரழுத்த மின்கம் பியை அமைக்கின்றனர். அவ்வாறு அமைக்கும் போது தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிக்கும் போது தங்களது உயிருக்கு ஆபத்து நேரிடும். சில தறிக்கூடத்தின் முதலாளிகளுக்கு சாதகமாக அரசு அதிகாரிகள் செயல்படு வதால், தங்களது விவசாயம் பாதிக்கப்படும், என கவலை யுடன் தெரிவித்தனர்.