தாராபுரம், அக். 12 - தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற் குள் வழியை மறித்து கொட்டப்பட்டிருக்கும் மண் குவியலால் பொதுமக்கள் அவதிய டைந்துள்ளனர். தாராபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், கிளை சிறை, பத்திரபதிவு அலுவ லகம் ஆகிய அரசு அலுவலகங்கள் ஒரே வளா கத்திற்குள் செயல்பட்டு வருகின்றன. வட்டாட் சியர் அலுவலகத்திற்குள் வட்ட வழங்கல் அலுவலர், சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சி யர், புள்ளியியல் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன. வட்ட வழங்கல் அலு வலர் அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று அலுவலகங்களுக்கும் செல்லும் வழியில் மண் குவியலாக கொட்டப்பட்டுள் ளது. ஏற்கனவே இங்குள்ள பாதை குண்டும் குழியுமாக உள்ள நிலையில் மண்ணும் குவி யலாக கொட்டப்பட்டதால் அந்த வழி யாக செல்லமுடியாமல் பொதுமக்கள் மட்டு மல்லாமல் ஊழியர்களும் கடும் அவதிய டைந்துள்ளனர். மண்குவியல் கொட்டப்பட்டு ஒருவாரமாகியும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே வட்டாட்சியர் உடனடி நட வடிக்கை எடுத்து மண்குவியலை அப்பு றப்படுத்தவும் பாதையை சரிசெய்யவும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.