கோவை, ஜூலை 10- வடவள்ளி அருகே உள்ள ஒரு தனி யார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பள்ளி நிர் வாகம் மூடிமறைக்க பார்ப்பதாக பெற் றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கோவை மாவட்டம், வடவள்ளி பகு தியில் உள்ள தனியார் பள்ளி (டெல்லி பப்ளிக்) செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில், 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந் நிலையில், அப்பள்ளியின் நூலக பொறுப்பாளர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபரின் தொல்லை அதிகரிக் கவே மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நடந்த விவரங்களை மாணவி படிக்கும் வகுப்பு ஆசிரியை ஒருவரி டம் தெரிவித்து உள்ளனர். இந்த விவ காரம் தனியார் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவ ரின் கவனத்துக்குச் சென்று உள்ளது. அவர் பள்ளிக்கு நேரில் சென்று விசா ரித்து உள்ளார். இச்சம்பவம் தொடர் பாக தனக்கு அறிக்கை அளிக்கும்படி அவர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தர விட்டு உள்ளார். இந்நிலையில், நூலக பொறுப்பா ளர் திடீரென ராஜினாமா செய்து வேலையை விட்டு நின்று விட்டார். பள்ளி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவர் வேலையை விட்டு நின்றதாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரம் வெளியே கசிய தொடங்கி பள்ளி மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. இதுபோல் மாணவிகளுக்கு உடன டியாக பாலியல் வன்கொடுமை ஏற்பட் டால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிக்கும் போலீசா ருக்கும் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால், அவ்வாறு புகார் செய்யாமல் அப்பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்க முயல்வதாக பெற்றோர் குற் றம் சாட்டி உள்ளனர். மேலும், மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கும் தக வல் தெரிவிக்கவில்லை. இது தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி நூலக பொறுப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியு றுத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த மாணவி ஒரு வர் பள்ளி வேனில் வந்து சென்று உள் ளார். அந்த மாணவிக்கும் பாலியல் வன் கொடுமை கொடுக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. அப்போதும் பிரச்சினை மூடி மறைக்கப்பட்டு உள்ளது. எனவே தற் போது பிரச்சினையிலாவது போலீ சார் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற் றோர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் தற்பொழுது ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். முன்னதாக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத் திற்கு சென்று பெற்றோர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். இவ்வி வாகரத்தில் காவல்துறை மற்றும் கல் வித்துறை தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், இல்லை யெனில் மாதர் சங்கம் போராட்டத்தில் இறங்கும் என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் எச்சரித்துள்ள னர்.