திருப்பூர், நவ.15- திருப்பூர் வேலம்பாளையம், காங்கேயம் ஆகிய பகுதிக ளில் 67ஆவது குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகி றது. அதன்படி, 67 ஆவது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் கிளை கள் சார்பில் ஏகேஜி நினைவகத்தில் நடந்து வரும் மாலை நேரப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மாலை நேரப் பள்ளியின் ஆசிரியர் ஹரீஷ் தலைமை யில் நடந்த இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப் பினர் வி.ஆர்.சரவணகுமார், அறிவியல் இயக்க நிர்வாகி ஷாருக்கான், கிளைச் செயலாளர் மு.பாண்டியராஜ், வெள் ளிங்கிரி, சுப்பிரமணி, கணேசன் உட்பட குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல காங்கேயம் கல்லேரி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெற்றோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.