court

img

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது.... வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு...

மதுரை:
திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  மணல்கொள்ளையடிக்கப்பட்டதற்கு முகாந்திரம் உள்ளது என்று கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018- ஆம் ஆண்டு திருநெல்வேலி  பேருந்துநிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் துவங்கின. இந்தப் பணியின் போது சுமார் ரூ.100 கோடி அளவில் தாமிரபரணி ஆற்று மணல்  கடத்தப்பட்ட விவகாரத்தில்சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவுகாவல்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, “மணல் கடத்தல், முறைகேடுகள் குறித்து ஆராய வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்தது. ஆணையம் அங்கு தாதுமணல் இருந்ததையும் மணல்கொள்ளையடிக்கப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.மீண்டும்  இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள், “திருநெல்வேலி பேருந்துநிலைய கட்டுமானப் பணியின்போது மணல் கொள்ளைநடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. எனவே இந்தவழக்கு சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவு  காவல்துறைவிசாரணைக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர். 

மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில்உள்ள அதிகாரி விசாரணை செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி உடனடியாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்  துறைத் தலைவரை விசாரணைக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம். இங்குள்ள மணல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துஅறிவியல் ரீதியாக சோதனை செய்து   அரிய வகைதாதுக்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கும், சோதனை செய்வதற்கும் அணு சக்தித் துறையின் உதவியைப்  பெறலாம் எனக் கூறிய நீதிபதிகள், வழக்குவிசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க உத்தரவிட்டனர்.

;