court

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கு தயார்... தமிழக அரசு....

மதுரை:
எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டு 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவைப்பொறுத்து மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநலமனுதாக்கல் செய்திருந்தார்.அதில், ‘‘இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இதில், 2018 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும்எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கப் பட்டுள்ளது.மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ‘‘புராஜெக்ட் செல்’’லை உருவாக்கி அதில் இயக்குநர், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குநர், நிர்வாக அதிகாரி உட்பட பலரை நியமனம் செய்து தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு திங்களன்று  விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுத்தரப்பில், ஒன்றியஅரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற்றது. அதுகுறித்து பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு முதற்கட்டமாக 50மாணவர்களை சேர்க்க ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் அறிவித்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய அரசு சார்பில், தமிழக அரசுதாக்கல் செய்த பதில் மனு ஒன்றிய அரசுவழக்கறிஞருக்கு வழங்கப்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ஒன்றியஅரசு வழக்கறிஞரிடம் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவை இரண்டு நாட்களுக்குள் வழங்கவேண்டும்.  தமிழக அரசு பதில் மனு குறித்து ஒன்றியசுகாதாரத்துறை மற்றும் ஏய்ம்ஸ் இயக்குநர் ஆகியோரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

;