court

img

மிரட்டல் விவகாரம்... திருமங்கலம் அமமுக கூட்டணி வேட்பாளர் ஆஜராக உத்தரவு...

மதுரை 
மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடத்தல் வழக்கின் விசாரணைக்காக அவனியாபுரம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்பு காவல்நிலையத்திலேயே பாலமுருகன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 
அப்போது போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், நீதிபதி மேற்பார்வையில் விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் ஏற்கனவே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துகருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றார்.

 இந்த சம்பவம் குறித்து வக்கீல் ஹென்றிடிபேன், ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாக முத்து கருப்பன் மனுவை வாபஸ் பெற்றதாக கூறியிருந்தார். இதனடிப்படையில், ஐகோர்ட் கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பில் மிரட்டல் ஆடியோ உரையாடல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் போனில் பேசியதாக கூறப்படும் ஆதிநாராயணன், கதிர், லோக நாதன் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;