court

img

திரையரங்கங்களுக்கு மட்டும் 100 விழுக்காடு அனுமதி எப்படி சாத்தியம்? நீதிமன்றம்

சென்னை:
பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதியளித்திருந்த தமிழ்நாடு அரசின் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பிலிருந்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

வெள்ளியன்று(ஜன.8) கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், திரையரங்குகளில்100 விழுக்காடு இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தற்போதுள்ள 50 விழுக்காடு இருக்கைகளுக்கான அனுமதி தொடரும் என்று உத்தரவு பிறப்பித் துள்ளது.தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 100 விழுக்காடு இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது. 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படுகிற தற்போதைய நிலையே தொடர வேண்டும். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வரும்வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர். மதுரை உயர் நீதிமன்றத்திலுள்ள வழக்கோடு, இந்த வழக்கையும் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;