court

img

நீதிமன்றத்தை விமர்சித்த எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி....

சென்னை:
நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018 -ல் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சித்துப் பேசிய எச். ராஜா மீது திருமயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர் மன்னிப்பு கோரினார்.இந்நிலையில் அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி தாக் கல் செய்த மனுவில், இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. நான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன்.

ஆனால் திருமயம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், நான் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த முன்ஜாமீன் மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்களன்று(ஜூலை 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜாவின் முன்ஜாமீனை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

;