court

img

தபால் வாக்களிப்பதற்குப் பதில் இயந்திரம் மூலம் வாக்களிக்க உத்தரவிடக்கோரி வழக்கு.... தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு....

மதுரை:
நூறு சதவீத வாக்குப்பதிவிற்கு துணை புரியும் வகையில்,தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள்மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரும் வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டித் துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,  பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கின்றன. தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந் தவை. தபால் ஓட்டுகள் அதிக அளவில் செல்லாதவையாக வீணாகின்றன. இதனால் நூறு  சதவீதவாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது. நூறு  சதவீத வாக்குப் பதிவிற்கு துணை புரியும் வகையில், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக அல்லாமல்,   வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந் தார்.இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதே போன்ற வழக்குசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

;