court

img

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் பணி ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..... வாலிபர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...

சென்னை:
கேங்மேன்களுக்கு பணி ஆணைவழங்கிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வாலிபர் சங்கத்தின் போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியாகும்.இதுதொடர்பாக இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வுநடத்தப்பட்டு  ஒரு வருட காலமாககாத்திருந்து சிரமத்திற்கு உள்ளா னார்கள்.இந்நிலையில், கேங்மேன் பணி ஆணை வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை சார்பில் நவம்பர் 10 ஆம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போராட்டத்தில் கேங்மேன் பணி ஆணை வழங்க கோரி தமிழகம்முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதிபோராட்டத்தை நடத்திட அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கேங்மேன் பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களும் கலந்து கொண்ட போராட்டங்கள் 50க்கும் மேற்பட்ட மையங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க வெற்றிகரமாக நடை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற வாலிபர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில், கேங்மேன் பணி ஆணை வழங்குவதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் கேங்மேன்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு வாலிபர் சங்கத்தின் சார்பில்முழுமையான ஆதரவை தெரிவித்ததோடு, பணி நியமனம் கிட்டும் வரைவாலிபர் சங்கம் தொடர் போராட்டத்தை உறுதியாக நடத்தும் என தெரிவித்திருந்தது.2021 ஜனவரி 29 அன்று சென்னையில் கோட்டை நோக்கி பேரணியை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் பேரணியை சிபிஎம் மதுரவாயல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பீமாராவ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை வலுவாக நடத்துவது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்அடிப்படையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலுவலகத்தின் முன்பாககேங்மேன் பணி ஆணை வழங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்நடத்துவது என அறிவிக்கப்பட்டி ருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் வர வேற்கிறது.இது மின்சார வாரியத்தில் தேர்வு எழுதி காத்திருந்த இளைஞர்களுக் காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழக அரசு, உடனடியாக பணி நியமன ஆணையை வழங்க வேண்டுமென வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. அறிவித்த 10 ஆயிரம் கேங்மேன்களுக்கு பணியாணை வழங்குவ தோடு, உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வில்வெற்றி பெற்ற மீதமுள்ள 4,994 பேருக்கும் பணி ஆணை வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திடவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;