court

img

டிராக்டர் பேரணி அனுமதி: காவல்துறைக்கே அதிகாரம்.... உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு...

புதுதில்லி:
டிராக்டர் பேரணியை அனுமதிக்க தில்லி காவல்துறைக்கே அதிகாரம். இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய உச்ச நீதிமன்றம்,  

‘‘தில்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதில் முடிவு எடுக்க வேண்டியது தில்லி போலீஸார்தான். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது.ஆதலால், நீங்கள் உங்கள் மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம். தில்லி போலீசாருக்குதான் இதில் அதிகாரம் இருப்பதால், அவர்கள்தான் இதைக் கையாள வேண்டும்” எனக் கூறியது. மேலும்,  டிராக்டர்பேரணிக்கு எதிரான மனுவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

;