court

img

பிளஸ்2 மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

பிளஸ்2 மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த மார்ச் தொடங்கியது. இதனால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களும் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பிளஸ் 2பொதுத் தேர்வை ரத்து செய்தது. 
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நீதிபதி கன்வில்கர் அமர்வின் முன் நடைபெற்றது. இதில் மாநிலக்கல்வி வழியில் பயின்ற மாணவர்களுக்கான பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கும் நடைபெற்றது. அப்போது ஆந்திர பிரதேசத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும்  12ம்வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 10 நாட்களுக்குள் பிளஸ்டூ மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து  முடிவெடுக்க வேண்டும் 
மேலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

;