court

img

குமரி, கேரள மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு....

புதுதில்லி:
குமரி, கேரள மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் கைவிட்டது. இந்தியாவில் விசாரணையை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கியஅமர்வின் உத்தரவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அதற்கு கேரள உயர் நீதிமன்றம்பொறுப்பு எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.தீர்ப்பின்படி, உச்சநீதிமன்றத் தில் இத்தாலிய அரசால் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.10 கோடி இழப்பீடுகேரள உயர் நீதிமன்ற பதிவேட்டில் மாற்றப்படும். இந்த வழக்கு இத்தாலியில் தொடரும் என்று நீதிமன்றம் கருதுவதாகவும், மத்திய,மாநில அரசுகள் இந்த நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்கும்என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு  நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள தால் தில்லி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக உள்ள பிற குற்றவியல் நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன. இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 கோடி, படகு உரிமையாளருக்கு ரூ.2 கோடி என ரூ.10 கோடிநீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்
ஆலப்புழா தோட்டப்பள்ளி கடற்பரப்பில் 2012 பிப்ரவரி 15 அன்றுகொல்லத்தைச் சேர்ந்த வாலன்டைன், குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அஜீஷ்பிங்கி ஆகியோர் வேறு சில மீனவர்களுடன் சேர்ந்து விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை கடந்துசென்ற என்ரிகா லெக்ஸி என்கிறஎண்ணெய் டேங்கர் கப்பலில் பாதுகாப்பு பணியில் சால்வடோர் கிரோன், மாசிமிலியானோ லடோரேஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலன்டைனும் அஜீஷ்பிங்கியும் கொல்லப்பட்டனர்.

;